முகத்தில் இருக்கும் பள்ளங்கள் மறைய கற்றாழையை ஒரு முறை இப்படி பயன்படுத்தினால் போதும்..!

aloe vera for open pores on face in tamil

How to Close Pores Permanently at Home in Tamil

முகத்தில் பருக்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் வருகிறது. இது பருவாக மட்டும் இல்லாமல் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க முகத்தில் பள்ளங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகவும் மாற செய்கிறது. இந்த பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் Face பேக், கிரீம் இதுபோன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அப்படி கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது இல்லை. அதனால் நாம் சாதாரணமாக நினைக்கும் கற்றாழையை வைத்து முகத்தில் இருக்கும் பள்ளங்களை இயற்கை முறையில் மறைய செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள் ⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!

முகத்தில் உள்ள பள்ளம் மறைய:

 face open pores home remedy in tamil

முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய கற்றாழை ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும் நல்ல Result கிடைக்கும். அந்த கற்றாழையை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை- ஒரு துண்டு
  • தேங்காய் பால்- 1 ஸ்பூன் 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Face Open Pores Home Remedy:

முகத்தில் உள்ள பள்ளம் மறைய

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பெரிய அளவிலான கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த கற்றாழையை நன்றாக சுத்தமான தண்ணீரில் அலசி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்து அந்த கற்றாழையின் மேல் இருக்கும் தோலினை மட்டும் நீக்கி விட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெலினை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது எடுத்துவைத்துள்ள கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு 1 கப் குளிர்ந்த தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 4 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

5 நிமிடம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள கற்றாழை தண்ணீரை Ice Cube Try-வில் ஊற்றி Fridge-ல் 5 முதல் 6 மணி நேரம் வரை வைக்கவும்.

5 மணி நேரம் கழித்த பிறகு Fridge-ல் இருக்கும் கற்றாழை Ice Cube- களை வெளியே எடுத்து 10 நிமிடம் கழித்த பிறகு ஒரே ஒரு Ice Cube– னை மட்டும் உங்களுடைய முகத்தில் பள்ளம் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து விட்டு சிறிது நேரம் கழித்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டேப்- 6

நீங்கள் தயார் Ice Cube மீதம் இருப்பதை Fridge-ல் வைத்து 1 வாரம் அதனை உபயோகப்படுத்தலாம்.

முகத்திற்கு தொடர்ந்து இதுபோல 15 நாட்கள் செய்து வந்தால் போதும் முகத்தில் உள்ள அனைத்து பள்ளங்களும் மறைந்து முகம் Glowing Skin போல அழகாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்⇒ 2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil