முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!

Advertisement

வாழைப்பழ ஃபேஸ் பேக் | Banana Face Pack at Home in Tamil

Banana Face Pack at Home in Tamil – வாழைப்பழத்தை நமது சருமத்திற்கு பயன்படுத்துவதினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?, வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இது ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் வியக்கவைக்கிறது. மேலும் வாழைப்பழத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தையாமின், கரோட்டின், ரைபோஃபிளேவின், நியாசின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இத்தகைய வாழைப்பழத்தை நாம் தினமும் சாப்பிடுவது நல்ல பழக்கமாகும். மேலும் இந்த வாழைப்பழத்தை சருமத்தில் அப்ளை செய்வதன் மூலம் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. அதாவது வாழைப்பழத்துடன் சிலவகையான பொருட்களை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஸ்கின், சரும சுருக்கம் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் முகம் வெள்ளையாகவும் வாழைப்பழத்தை சருமத்தில் அப்ளை செய்யலாம். சரி வாங்க இன்றைய பதிவில் 5 வகையான சரும பிரச்சனைகளுக்கு வாழைப்பழ ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

1 வறண்ட சருமத்திற்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் – Banana Face Pack For Dry Skin in Tamil:Dry Skin

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மேலும் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்கிறது. ஆக சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழ ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • 1/2 பழுத்த வாழைப்பழம் 
  • ஒரு ஸ்பூன் தேன் 

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளவும், அதில் 1/2 பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்,

பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் வாழைப்பழ ஃபேஸ் பேக் தயார்.

Banana Face Pack at Home in Tamil – பயன்படுத்தும் முறை:

தயார் செய்த இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும்  நன்றாக அப்ளை செய்து பின் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் அலசவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் ஒரு முறை மட்டும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதினால் வறண்ட சருமம் மிருதுவாக காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கான டிப்ஸ் இதோ

2 எண்ணெய் சருமத்திற்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் – Banana Face Pack For Oily Skin in Tamil:Oily Skin

தேவையான பொருட்கள்:

  • 1/2 துண்டு – வாழைப்பழம்
  • 1/4  துண்டு – பப்பாளி
  • 1/4 துண்டு – வெள்ளரி

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/2 துண்டு வாழைப்பழம், 1/4 துண்டு பப்பாளி, 1/4 துண்டு வெள்ளரிக்காய் இவை அனைத்தும் சேர்த்து நன்கு பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளவும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். பிறகு ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக அப்ளை செய்து பின் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் ஆயில் ஸ்கின் பிரச்சனை சரியாகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
7 நாட்களில் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!

3 முகப்பரு நீங்க வாழைப்பழ ஃபேஸ் பேக் – Banana Face Pack for Acne Skin in Tamil:Acne Skin

வாழைப்பழம் முகப்பருவை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகும். இந்த வாழைப்பழத்துடன் சில பொருளை மிக்ஸ் செய்து முகத்தில் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும். அந்த ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 1/2 துண்டு 
  • அரைத்த வேப்பிலை  பேஸ்ட் – டீஸ்பூன்
  • மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருள்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். அவ்வளவு தான் ஃபேஸ் பேக் தயார். இதை பயன்படுத்தும் முறையை பற்றி பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பிறகு 20  நிமிடம் காத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து சருமத்தை தண்ணீரால் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க

4 முக சுருக்கம் நீங்க வாழைப்பழ ஃபேஸ் பேக் – Banana Face Pack For Ageing Skin in Tamil:Ageing Skin

இளம் வயதிலேயே பலருக்கு முகச்சுருக்கம் பிரச்சனை வந்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு சிறிய வயதாக இருந்தாலும், அவர்களது தோற்றம் முதியவர்களை போன்று இருக்கும். இதனை சரி செய்வதற்கும் வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக திகழ்கிறது. சரி இந்த முக சுருக்கம் பிரச்சனையை வாழைப்பழத்தை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • 1/2 துண்டு – வாழைப்பழம் 
  • தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

1/2 துண்டு வாழைப்பழத்தை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். அவ்வளவு தான் ஃபேஸ் பேக் தயார். இதை பயன்படுத்தும் முறையை பற்றி பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடம் காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை வாரம் ஒரு முறை செய்து வர முக சுருக்கம் பிரச்சனை நாளடைவில் சரியாகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதைTry பண்ணுங்க..!

5 முகம் வெள்ளையாக வாழைப்பழ ஃபேஸ் பேக் – Banana Face Pack For Whitening Skin in Tamil:banana Face Pack For Whitening Skin

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 1/2 துண்டு 
  • கடலை மாவு – 1 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு – 1/2 மூடி 

செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் அலசவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் மூன்று முறை சருமத்திற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள கருமைகள் அனைத்தும் நீங்கி, சருமம் வெள்ளையாக மாறும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவு கருமையாக இருந்தாலும் வெள்ளையாக மாறமுடியும் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement