ஒரே வாரத்தில் பொலிவு பன்மடங்கு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் | Easy Beauty Tips for Face in Tamil

Easy Beauty Tips for Face in Tamil

முகம் வெள்ளையாக எளிய டிப்ஸ் | Easy Beauty Tips for Face at Home in Tamil

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று மனிதர்களுக்கு தோன்றுவது இயல்பு தான். இப்பொழுது ஆண்களும் பெண்களுக்கு இணையாக முகத்தை பராமரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் ஆண்கள், பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் போன்றவை வர ஆரம்பித்துவிடும். இதை சரி செய்வதற்காக விலை உயர்ந்த கிரீம்கள், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இது போன்ற வேதிப்பொருள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதால் முகம் விரைவில் சுருக்கம் அடைந்துவிடுகிறது. இத்தகைய சரும பிரச்சனைகளை தடுக்க இயற்கையிலே, அதுவும் நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி எளிமையாக சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்று இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Natural Beauty Tips in Tamil

 1. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 2. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 3. காய்ச்சாத பால் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 • Natural Beauty Tips in Tamil: முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (sensitive Skin உள்ளவர்கள் எலுமிச்சை சாறு பயன்படுத்த வேண்டாம்), 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து மிக்ஸ் பன்னவும்.
 • இந்த Face Pack-ஐ  பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு காட்டன் துணியில் பாலை நினைத்து முகத்தில் தடவி சருமத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.
 • பின்னர் இந்த Face Pack-ஐ முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இந்த method-ஐ நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சருமம் நல்ல Glow-ஆக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

Natural Beauty Tips in Tamil

 1. உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்தது)
 2. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
 3. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 4. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 2

 • Easy Beauty Tips for Face in Tamil: ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து மசித்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் (ஆண்கள் பயன்படுத்தினால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்க வேண்டாம்), 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒரு பேஸ்ட் போல மிக்ஸ் பண்ணவும்.
 • பின் இதை முகத்தில் தடவி 15-20 Minutes ஊறவைத்து முகத்தை தண்ணீரால் கழுவிவிடவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த Method-மூலம் முகத்தில் இருக்கும் Pigmentation, Blackheads போன்றவை நீங்கி முகம் பொலிவு பெரும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்

தேவையான பொருட்கள்:

easy beauty tips for face

 1. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 2. முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்
 3. Coffee Powder – 1 டேபிள் ஸ்பூன்
 4. காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 3

 • Easy Beauty Tips for Face at Home in Tamil: ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் Coffee Powder, 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.
 • பின் இதை முகத்தில் தடவி 10-15 மினிட்ஸ் ஊறவைத்து பின்னர் முகத்தை நீரால் கழுவி கொள்ளவும்.
 • இதை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும், அதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெரும்.
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க தீர்வு

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil