How To Grow Eyebrows at Home
முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டுமில்லை புருவமும் தான். அத்தகைய புருவ முடி சிறியதாக இருந்தால் நல்லா இருக்குமா.! நல்லா இருக்காது. புருவ முடி அழகாக இருப்பதற்காக பார்லருக்கு சென்று அழுகுபடுத்துவீர்கள். இல்லையென்றால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி புருவ முடியை அடர்த்தியாக வளர வைப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.
How To Grow Eyebrows At Home:
தேங்காய் எண்ணெய்:
முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்து இரவு தூங்குவதற்கு முன்பு புருவத்தில் அப்ளை செய்து காலையில் கழுவி கொள்ளவும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.
தேயிலை எண்ணெய்:
தேயிலை எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு புருவத்தில் அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி கொள்ளவும்.
லாவெண்டர் எண்ணெய்:
லாவெண்டர் எண்ணெய் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. புருவ முடியில் லாவெண்டர் எண்ணையை அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும்.
இந்த எண்ணெய் சிலருக்கு அலர்ஜி ஆக வாய்ப்புள்ளது. அதனால் சிறிதளவு எடுத்து சோதித்து பார்ப்பது நல்லது.
குளிக்கும் போது தலைமுடி கொட்டுகிறதா..? இதை சேர்த்து குளித்து பாருங்கள் ஒரு முடி கூட கீழே கொட்டாது..!
கற்றாழை:
கற்றாழை முடி வளர்ச்சிக்கும், முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. கற்றாழையை சீவி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை புருவ முடியில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இது போல் தினமும் செய்து வந்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.
ரோஸ்மேரி ஆயில்:
ரோஸ்மேரி எண்ணெய் சிறிதளவு, தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து இரண்டையும் கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை புருவ முடியில் அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவி கொள்ளலாம்.
7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |