முகம் ஜொலிக்க வேண்டுமா? Face Brightness Natural Tips in Tamil
Skin Whitening Home Remedies in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் முகம் ஜொலிக்க வீட்டிலேயே எளிமையாக ஹோம் ரெமிடி இயற்கை முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்து கொள்வார்கள். பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பார்லரில் கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சரும அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு 100% வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். சரி வாங்க இயற்கையான முறையில் இந்த ரெமிடியை எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம்..!
முகம் வெள்ளையாக ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி..! |
முகத்தை ஜொலிக்க வைக்க – தேவையான பொருள்:
- முள்ளங்கி – 1/2
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு சந்தன பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு – 1
செய்முறை விளக்கம்:
ஸ்டேப் 1: முதலில் தட்டை வடிவில் கொண்ட பலகையினை எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 2: அந்த பலகையில் உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டி ஒரு பீஸினை எடுத்துக்கொள்ளவும். அந்த ஒரு பீஸை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 3: அடுத்ததாக அரை முள்ளங்கியினை தோள் சீவி எடுத்து சிறிய சிறிய துண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 4: அதன் பிறகு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் முள்ளங்கியினை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 5: அடுத்து தனியாக ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ளதை வைத்துக்கொள்ளவும். இவற்றில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 6: தயிர் சேர்த்த பிறகு சிவப்பு சந்தன பவுடர் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும். இப்போது மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.
ஸ்டேப் 7: சூப்பரான முக சருமத்தை பாதுகாக்கும் ஹோம் ரெமிடி தயார். இதனை முகத்தில் அப்படியே அப்ளை செய்யவும்.
ஸ்டேப் 8: முகத்தில் தடவி 5 நிமிடம் வரை வைக்க வேண்டும். 5 நிமிடம் ஆன பிறகு முகத்தில் உள்ளதை வாஷ் செய்து கொள்ளலாம். இந்த ரெமிடியை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க. கருமையான சருமம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |