முகம் பளபளப்பாக என்ன செய்வது
இன்றைய காலத்தை பொறுத்தவரை ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரிடமும் முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு என்ன செய்வது என்பது தான் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். அதிலும் கூட வீட்டில் இருக்கும் போது முகத்தை யாரும் அவ்வளவாக கண்டு கொள்வது இல்லை. ஆனால் வெளியில் செல்ல வேண்டும் என்று தெரிந்தால் போதும் கையில் கிடைத்தனவற்றை எல்லாம் அப்ளை செய்து முகத்தை Glowing Skin போல மாற்ற வேண்டும் நினைப்பார்கள். இப்படி நீங்கள் செய்து கொண்டு வெளியில் சென்றாலும் கூட அவை முற்றுலுமாக முகத்தை பளபளக்க செய்வது கிடையாது. ஆகவே இயற்கையான முறையில் தேனை மட்டும் வைத்து முகத்தை எப்படி பளபளக்க செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
How to Glowing Skin Naturally at Home:
வீட்டில் இருக்கும் தேனை வைத்து இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்வதற்கு மூன்று குறிப்புகள் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த மூன்று குறிப்புகளில் நீங்கள் எந்த குறிப்பினை வேண்டுமானாலும் பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு- 1
தேன் உடலிற்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கு நல்ல பலனை அளிக்கும் ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் 2 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துள்ள தேன் மற்றும் மஞ்சள்தூளினை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு அதனை முகத்தில் நன்றாக அப்ளை செய்து அதனை 15 நிமிடம் வைத்து விட்டு அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
பாதியில் முடி உடைந்து உதிர்கிறதா..! இதை மட்டும் வாரத்தில் 1 முறை செய்யுங்கள்..! |
குறிப்பு- 2
தயிர் நமது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இத்தகைய தயிருடன் தேனை கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும் போது இயற்கையாக முகத்தை பளபளப்பாக மாற்றி விடும்.
அதனால் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலந்து முகத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை குளிந்த நீரால் கழுவி விடுங்கள்.
முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..! |
குறிப்பு- 3
முகத்தை நீங்கள் எதிர்பார்த்த மாதிரி பளபளப்பாக வைப்பதற்கான மூன்றாவது குறிப்பு என்னவென்றால் ஜொஜோபா எண்ணெய் 4 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கலந்து வைத்துள்ள எண்ணெயில் இருந்து 3 சொட்டினை மட்டும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த மூன்று குறிப்பில் எதாவது ஒன்றை மட்டும் செய்தால் போதும் முகம் பளபளப்பாக இருப்பதை கண்ணாடியில் நீங்கள் காணலாம்.(குறிப்பு: தேன் முகத்திற்கு பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும் நபர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்)
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |