Guava Leaves for Hair in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வதுதான். அப்படி உங்களுக்கும் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளதா இனி கவலை வேண்டாம். உங்களின் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்து அதனை முற்றிலுமாக நீக்கி நன்கு தலைமுடி வளர உதவும் ஒரு சில சிறந்த எளிய வழிமுறைகளை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதிலும் அனைவருக்கும் எளிதாக கிடைக்க கூடிய கொய்யா இலையை பயன்படுத்தி எவ்வாறு தலைமுடி உதிர்வை தடுப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
Home Remedies for Hair Growth and Thickness in Tamil:
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள பிரச்சனையான தலைமுடி உதிர்வை தடுத்து தலைமுடி பலமடங்கு நன்கு வளர ஏற்ற சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
டிப்ஸ் – 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கொய்யா இலை – 10
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- அரிசி தண்ணீர் – 1/4 கப்
இதையும் படியுங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி அதிலிருந்து கிடைக்கும் சாற்றினை மட்டும் எடுத்து உங்களின் தலையில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.
டிப்ஸ் – 2
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கொய்யா இலை – 10
- சின்ன வெங்காயம் – 20
- கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
இதையும் படியுங்கள்=> உங்கள் தலைமுடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 10 கொய்யா இலை மற்றும் 20 சின்ன வெங்காயம் ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி அதிலிருந்து கிடைக்கும் சாற்றுடன் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலையில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள்=> இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |