உங்கள் தலைமுடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

தலைமுடி எப்பொழுதும் மிருதுவாக இருக்க டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றித்தான். அது என்னவென்றால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.  பொதுவாக நம்மில் பலருக்கும் நமது தலைமுடியை  மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது என்று தெரிந்திருக்காது அவர்களுக்காகத் தான் இந்த பதிவு. இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை மட்டும் நீங்கள் பயன்படுத்தி உங்கள் தலைமுடி மிருதுவாக மாறியிருப்பதை  நீங்களே காணலாம். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தலைமுடி நுனியில் உள்ள வெடிப்புகள் மறைய டிப்ஸ்

உங்கள் தலைமுடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க டிப்ஸ்:

hair shining tips in tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

ஆளிவிதை சாறு தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பழம் – 3
  2. ஆளிவிதை – 3 டீஸ்பூன் 
  3. கற்றாழை – 1 சிறிய துண்டு 
  4. தண்ணீர் – 2 டம்ளர் 

ஆளிவிதை சாறு செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் 3 டீஸ்பூன் ஆளிவிதையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் பொழுது  ஷாம்பூ போல மாறும் அப்பொழுது அதனை அடுப்பிலிருந்து இறக்கி மற்றொரு பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து நாம் எடுத்துவைத்திருந்த 1 சிறிய துண்டு கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் பிரித்து  அதனை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 3 வாழைப்பழங்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதனுடனே நாம் தயார் செய்து எடுத்து வைத்திருந்த ஆளிவிதைச் சாறு  மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை நமது தலையில் தடவி 1 மணிநேரம் வரை வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பூ அல்லது சீயக்காயை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள்.

மேலே கூறியுள்ள டிப்ஸை வாரத்தில் 1 நாள் என்று 1 மாதம் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாக மற்றும் பளபளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

 உங்களது முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க கண்டிஷனரை ட்ரை பண்ணி பாருங்க

இது போன்று டிப்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து  கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil

 

Advertisement