வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எப்போ பார்த்தாலும் முடி கொட்டுதா..! அப்படினா இதை ட்ரை பண்ணுங்க முடி உதிர்வே இருக்காது..!

Updated On: November 30, 2024 1:03 PM
Follow Us:
hair fall control home remedies in tamil
---Advertisement---
Advertisement

தலைமுடி உதிர்வு

பொதுவாக எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது என்று ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அதிகமாக புலம்புகிறார்கள். அதிலும் சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி நாம் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் இதுமாதிரி நாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது. அதனால் இன்று முடி பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வினை அளிக்கக்கூடிய ஒரு ஹேர் பேக் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

முடி உதிர்வது காரணம்:

தினமும் நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை என்றால் அதன் விளைவாக முதலில் முடி உதிர்வு பிரச்சனை தான் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

How to Stop Hair Fall at Home:

  1. தேங்காய்- 1 மூடி 
  2. வெந்தயம்- 3 ஸ்பூன் 
  3. முட்டை- 1
  4. காட்டன் துணி- சிறிதளவு 

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் ஹேர் பேக் செய்வதற்கு எடுத்து கொள்ளுங்கள்.

முடி கத்த கத்தையாக கொட்டுகிறதா அனைத்தும் சரியாக இந்த ஒரு இயற்கையான கிரீம் போதும்

ஹேர் பேக் செய்முறை:

தலைமுடி உதிர்வு

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் ஆனது முடிக்கு பல விதமான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால் 3 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் 1 மூடி தேங்காயினை துருவி அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக தேங்காய் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் எடுத்துவைத்துள்ள தேங்காய் பால் இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு காட்டன் துணியில் அரைத்துள்ள பேஸ்ட்டினை அதில் சேர்த்து சுத்தமாக சாறு பிழிந்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

கடைசியாக பவுலில் உள்ள பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கக்கூடிய ஹேர் பேக் தயார்.

தலையில் ஹேர் பேக் அப்ளை செய்தல்:

how to use hair pack in tamil

இப்போது தலையில் நன்றாக வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை அப்ளை செய்து விட்டு பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை அப்ளை செய்ய வேண்டும்.

அதன் பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் சீயக்காய் கொண்டு தலை முடியினை அலசி விட வேண்டும். இந்த ஹேர் பேக்கினை அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனை என்பது விரைவில் இருக்காது.

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..  அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க.. 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!