எப்புடிங்க இதெல்லாம் அப்டினு உங்களுடைய முடியின் வளர்ச்சியை பார்த்து வாய் அடைத்து போகணுமா..! அப்போ இதை ட்ரை பண்ணலாமே..!

Hair Growth Home Remedies

அனைவருக்கும் முடியின் மீது ஒரு ஆசை இருக்கும். அதுவும் நம்முடைய முடியை விட வேறு ஒருவருக்கு அதிகமான முடி இருந்தால் போது அவர்களே பார்த்து கொண்டிருப்பார்கள். சரி எப்படியாவது நாமும் அவர்களை விட அதிகமாக முடியை வளர்த்து காண்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக கடையில் விற்கும் ஆயில், ஹேர் பேக் மற்றும் ஷாம்பு என நிறைய பயன்படுத்தி பார்த்துப்பார்கள். ஆனால் அவற்றை பயன்படுத்துவதில் எந்த விதமான பலனும் இல்லாமல் தான் போகிவிடும். அதனால் தான் எப்படியுங்க இதெல்லாம் அப்டினு உங்களுடைய முடியின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு இயற்கையான முறையில் தயாரிக்கும் ஹேர் பேக் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த ஹேர் பேக்கை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர்ச்சியை அதிகரிக்க:

அனைவருடைய வீட்டிலும் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வைத்து முடியின் வளர்ச்சியை இரண்டு மடங்கு அதிகரிக்க செய்ய முதலில் ஒரு ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பழம்- 3
  2. தயிர்- 3 தேக்கரண்டி 
  3. ஆலிவ் எண்ணெய்- 2 தேக்கரண்டி 

இதையும் படியுங்கள்⇒ என்றும் இளமையாக இருப்பதற்கும், முகம் பளபளப்புக்கும் இந்த ஒன்று போதும் ட்ரை பண்ணி பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க…

ஹேர் பேக் தயார் செய்தல்:

முடி வளர என்ன செய்ய வேண்டும்

வாழைப்பழத்தை நறுக்குதல்:

 வாழைப்பழத்தில் வைட்டமின் B6, வைட்டமின் A, வைட்டமின் C, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை நம்முடைய முடிக்கு ஹேர் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர் வரை சென்று முடி நன்றாக வளரும்.  

அதனால் எடுத்துவைத்துள்ள வாழைப்பழத்தை முதலில் சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல்:

இப்போது ஒரு மிக்சி ஜாரில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் 3 தேக்கரண்டி தயிர் இரண்டையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

பவுலில் பேஸ்டை சேர்த்தல்:

அடுத்து பவுலில் உள்ள பேஸ்டுடன் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும். இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஹேர் பேக் தயார்.

இதையும் படியுங்கள்⇒ஆரஞ்சு தோலுடன் இதை மட்டும் கலந்து போடுங்கள்..! முகம் எப்போதும் பளிச்சென்று ஜொலிக்கும்.. 

முடிக்கு ஹேர் பேக் அப்ளை செய்தல்:

முடிக்கு அப்ளை செய்யும் முறை

முதலில் உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயினை நன்றாக தடவி கொள்ளுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் உச்சி முதல் நுனி வரை அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இதனை நீங்கள் வாரம் 1 முறை அப்ளை செய்தால் போது முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடைந்து இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil