முடி அடர்த்தியாக வளர எண்ணெய் | Hair Growth Oil Home Remedies in Tamil
அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் ஆசையில் ஒன்று. தன் பெண் குழந்தைக்கு தலை முடி நன்கு அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல் பெண்களுக்குமே பொதுவாக தலை முடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இருந்தாலும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். இதனை கண்டுக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் தலைமுடி எலிவால் போன்று ஆகிவிடும். நம்மை சுற்றி இருப்பவர்களும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆக முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய நீங்கள் வெறும் தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு எண்ணெயை மட்டும் கலந்து தலையில் அப்ளை செய்தால் போதும் தலைமுடி உதிர்வு பிரச்சனை முழுமையாக நின்று விடும். சரி வாங்க அது என்ன எண்ணெய் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
முடி கருமையாக அடர்த்தியாக வளர எண்ணெய் – Hair Growth Oil Home Remedies in Tamil:
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் விற்பனை செய்யப்படும் கண்டகண்ட எண்ணெய்களை பயன்படுத்துவரை இன்றுடன் நிறுத்தி கொள்ளுங்கள். தலை முடிக்கு சிறந்த எண்ணெய் எதுவென்றால் சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டும் தான்.
1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் 20 ml விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இவ்வாறு கலந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் தினமும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வரலாம்.
முடி உதிர்வுக்கு மிக முக்கிய காரணம் உடல் சூடு தான். ஆக இந்த உடல் சூட்டை குறைக்க நமக்கு இந்த விளக்கெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடியை வளர செய்கிறது.
இந்த எண்ணெயை அனைவரும் பயன்படுத்தலாம், இருப்பினும் ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும். இந்த எண்ணெயை உபயோகப்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் விளக்கெண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது ஆக ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். ஆக அவர்கள் மட்டும் இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்
👉 இந்த 1 பொருள் போதும் நரைமுடியை நீக்கிவிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |