ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள் (Hair Loss Treatment for Men at Home)..!
Mudi valara tips / முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்:- ஆண்கள் கவலைப்படும் விஷயங்களில் ஒன்று முடி உதிர்வு பிரச்சனை. இந்த முடி உதிர்வு பிரச்சனையை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் சந்திக்கின்றனர்.
அதாவது ஆண்களுக்கு தான் அதிகமாக முடி உதிர்ந்து சொட்டை விழுகின்றது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதியவராக தோற்றமளிக்கின்றனர். இதன் காரணமாக பல ஆண்கள் திருமணமாவதில் சிக்கலை சந்திக்கின்றனர்.
இந்த தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல வேறு சில காரணங்களும் உள்ளது. அதாவது ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் காரணம் என்று சொல்லலாம்.
இந்த பிரச்சனையை தடுத்து முடி வளர(mudi uthirvai thadukka tips in tamil), பல ஆண்கள் கடைகளில் விற்கப்படும் விதவிதமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர், இருப்பினும் எந்த ஒரு பலனும் அவற்றின் மூலம் கிடைத்திருக்காது.
முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள் |
சரி இங்கு சொட்டை தலையிலும் முடி வளர்ச்சியை (hair loss treatment for men at home) தூண்ட சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள் – நெல்லிக்காய்:-
Mudi valara tips: 1 நெல்லிக்காய் முடி வளர்ச்சியை தூண்ட பயன்படுகிறது. எனவே பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி குளிரவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி தனியாக வைத்து கொள்ளவும்.
பின் இந்த நெல்லிக்காய் எண்ணெயை தினமும் ஆண்கள் தலைக்கு தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து வர, தலைமுடி வளர்ச்சி தூண்டப்படும்.
முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்? பகுதி 2 |
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள் – சீயக்காய்:-
Mudi valara tips: 2 பூந்திக்கொட்டை, சீயக்காய் மற்றும் நெல்லிக்காய் மூன்றையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு இந்த நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின் 1/2 மணி நேரம் ஊறவைத்து அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள் – வெந்தயம் மசாஜ்:-
Mudi valara tips: 3 வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனுடன் செம்பருத்தி இலையை சேர்த்து அரைத்து, அத தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின் குளிர்ந்த நீரால் தலை அலசுங்கள். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை என, ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி நன்கு வளர்ச்சி அடையும்.
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள் – வெங்காய பேஸ்ட் மசாஜ்:-
Mudi valara tips: 4 முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்வதில் வெங்காயம் சிறந்த பலனை தருகிறது.
எனவே முடி உதிர்ந்த இடத்தில் வெங்காயத்தை போஸ்ட்டு போல் அரைத்து தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி செய்து வர வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சியை தூண்டும்.
5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..! |
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள் – கடுகு எண்ணெய் மசாஜ்:-
mudi uthirvai thadukka tips in tamil: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சிறிதளவு கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, பின் அதில் நன்கு டேபிள் ஸ்பூன் மருதாணி இலையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவேண்டும்.
பின் எண்ணெயை குளிரவைத்து, வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வர, சில வாரங்களிலேயே முடி உதிர்ந்த இடத்தில், முடி வளர்ச்சியடைவதை உணர முடியும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |