கொத்து கொத்தா முடி கொட்டுதா..? அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..!

Advertisement

முடி உதிர்வதை தடுக்க எளிய வழிகள் / Hair Mask for Hair Growth at Home..!

Best Hair Mask for Hair Growth at Home:- ஒவ்வொருவருக்கும் தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தலை முடி தான் ஒருவரது அழகை நிர்ணயிக்கிறது. அத்தகைய தலை முடியை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தலைமுடியை பராமரிக்க பலவகையான வழிமுறைகள் இருந்தாலும், இயற்கை முறையை பாலோ செய்வதுதான் மிக சிறந்த முறையாகும். நாம் தலைமுடியை என்னதான் ஒழுங்காக பராமரித்தாலும் கொத்து கொத்தாக முடி கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட இந்த பதிவில் இயற்கை ஹேர் மாஸ்க் தயார் செய்து எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இயற்கையான முறையில் தலை முடியை பராமரித்தால் தலை முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும். சரி வாங்க முடி உதிர்வை தடுக்க இரண்டு வகையான இயற்கை ஹேர் மாஸ்க் வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை

Homemade Hair Mask for Hair Growth and Thickness in Tamil

Pachai payaru for Hair Growth in Tamil:-

hair mask in hair growth tamil – தேவையான பொருட்கள்:-

  1. பாசிப் பயறு – 5 டேபிள் ஸ்பூன்
  2. கருவேப்பிலை – ஒரு கையளவு
  3. அரிசி கழுவிய நீர் – 1/2 கிளாஸ்
  4. செம்பருத்தி பூ – 5
  5. கற்றாழை ஜெல் – 1/4 கப்

செய்முறை:-

பச்சைப் பயறை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.

பின் மறுநாள் தலை குளிப்பதற்கு முன் ஊறவைத்த இந்த பாசிப் பயறை எடுத்து அதனுடன் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஹேர் மாஸ்க் தயார் இதனை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின் 30 நிமிடங்கள் கழித்து குளிந்த நீரால் தலை குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம் நல்ல பலன் கிடைக்கும். அதாவது முடி உதிர்வு நின்று, முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும், மிக கருமையாகவும் வளர செய்யும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம்..!

முடி உதிர்வதை தடுக்க இயற்கை ஹேர் மாஸ்க் செய்முறை / Best Hair Mask for Hair Growth at Home:-

pachai payaru benefits for hair in tamil – தேவையான பொருட்கள்:-

  • வடித்த சாதம் – 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் – 1/4 கப்
  • கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

செய்முறை:-

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின் தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 45 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு தலை குளிக்க வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை பாலோ செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும், முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும்.

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில ஏதேனும் ஒரு டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்து வந்தாலே போதும் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

பாசி பயறு பயன்கள்

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips
Advertisement