வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

தலை முடி உதிர்வதை தடுக்க | hair Oil For Summer Season in Tamil 

எப்போதும் வெயில் காலம் வந்தவுடன் முடிகொட்ட ஆரம்பிக்கும். நம்முடைய உடலில் அதிக சூடு ஏற்பட்டதன் காரணமாக தான் இந்த பிரச்சனையானது ஏற்படுகிறது. நம்முடைய உடலில் ஏதேனும் மாற்றம் அதாவது அதிக குளிர்ச்சி அல்லது அதிக வெப்பம் ஏற்பட்டால் அதனாலும் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் நம்முடைய முடியை சரியாக பராமரிப்பது நல்லது. அதேபோல் நம் தலைமுடிக்கு வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரி சூப்பரான தேங்காய் எண்ணெய் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

hair Oil For Summer Season in Tamil:

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்
  • கிராம்பு
  • பட்டை

hair Oil For Summer Season in Tamil

இந்த இரண்டு பொருளிலும் ஆன்டி ஆக்சிடென்ட்கள், ஆண்டி டாக்ஸின் இதில் அதிகமாக உள்ளது. இந்த பொருளில் இருக்க கூடிய சத்துக்கள் நம்முடைய முடிக்கு  நல்ல சத்துக்களை ஏற்படுத்தும். அதேபோல வேரில் இருக்கக்கூடிய பொடுகையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த இரண்டு பொருளிலும் இருக்க கூடிய சத்துக்கள் நம்முடைய முடியை நன்கு வளர உதவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை: 

முதலில் தண்ணீர் சேர்க்காமல் சுத்தமான மிக்சி ஜாரில் இந்த கிராம்பு, மற்றும் பட்டையை நன்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

hair Oil For Summer Season in Tamil

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். அந்த எண்ணெய் கொஞ்சம் சூடாகும் வரை காத்திருக்கலாம்.

அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே 2 நிமிடம் விட்டுவிடவேண்டும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை On செய்து கொள்ளவும். மிதமான தீயில் வைக்கவும். இல்லையென்றால் பொடி கருகிவிடும். மறுமுறை எண்ணெய் சூடாக மாறிய பின் அடுப்பை அணைத்து விடவேண்டும். அடுத்து அதனை ஆறவிட்டு பின் ஒரு பாட்டிலில்  எண்ணெயை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை இரவு மட்டும் தான் அப்ளை செய்யவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. முதல் நாள் இரவே தலை முடியை சிக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் முடியை இரண்டு பக்கமாக பிரித்துக் கொள்ளவும். அதன் பின் தேங்காய் எண்ணெயை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளவும்.

பின்பு வேரிலிருந்து அப்ளை செய்யவேண்டும். வேரில் அப்ளை செய்தால் போதுமானது ஆகும். முடியில் அப்ளை செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லை. தலை முடியில் அப்ளை செய்யும் பொது மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்து தலையை குளித்தாலும் சரி, இல்லை என்றால் அப்படியே பின்னி போட்டுக் கொள்ளலாம்.

 

கொத்து கொத்தாக முடி கொட்டுதா? அப்போ இந்த வேம்பாளம் பட்டை எண்ணெயை தடவுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil