Hair Oil For White Hair to Black in Tamil
பொதுவாக நரைமுடி பிரச்சனை உள்ளவர்கள் பல வகையான ரெமடியை கண்டிப்பாக தலைக்கு பயன்படுத்தி இருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு சிலருக்கு நல்ல பலன்களை கொடுத்திருக்கலாம், ஒரு சிலருக்கு பலன்கள் அளிக்காமலும் இருந்திருக்கலாம். இந்த நரைமுடி வருவதற்கு மிக முக்கிய காரணம் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவு முறை ஆகும். சரி இந்த பதிவில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நரை முடி கருமையாக ஒரு அருமையான ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை மற்றும் அதனை பயன்படுத்தும் முறையை பற்றி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ பொடி – 4 டேபிள் ஸ்பூன்
- கருப்பு எள்ளு – 3 டேபிள் ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
- இரும்பு வாணலி – 1
- தேங்காய் எண்ணெய் – 250 மில்லி லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரை முடி மறைய இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள்.. 100% நரை முடி கருமையாக மாறிடும்..!
ஹேர் ஆயில் செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும் அதில் செம்பருத்தி பொடி, கரிசலாங்கண்ணி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்றாக எண்ணெயை காய்ச்சி கொள்ளுங்கள்.
ஐந்து நிமிடம் கழித்து கருப்பு எள்ளு மூன்று டேபிள் ஸ்பூன் சேர்த்து 8 முதல் 10 நிமிடம் காய்ச்ச வேண்டும். அப்பொழுது அடுப்பு மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.
10 நிமிடம் கழித்து அடுப்பை Off செய்து விடுங்கள். பிறகு எண்ணெயை நன்றாக ஆறவைக்கவும் அந்த சமயம் எண்ணெய்க்கு மூடி போட்டுவிட வேண்டாம், மூடி போடாமல் அப்படியே ஆறவைக்கவும்.
எண்ணெய் ஆறிவிட்டது என்று வேறொரு பாத்திரத்திற்கு எண்ணெயை மாற்றிவிட வேண்டாம் இரண்டு நாட்கள் அப்படியே எண்ணெய் இரும்பு வாணலியிலேயே இருக்கட்டும்.
இரண்டு நாள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் எப்போதும் நரை முடி வராமல் முடி கருகருவென்று இருக்க இதை பாருங்கள்..!
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெய் தினமும் தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வரலாம். குறிப்பாக நாம் தயாரித்த இந்த எண்ணெய் 6 மாதங்கள் வரை கெட்டு போகாது. தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாது என்பவர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது தலைக்கு கூந்தல் எண்ணெயாக பயன்படுத்துங்கள். அப்பொழுது தான் நரை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும். ஒரு மாதம் தொடர்ந்து இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் நல்ல ரிசல்ட்டை நீங்களே உணரமுடியும். கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள் நன்றி வணக்கம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |