முடி மிக வேகமாக வளர சக்திவாய்ந்த 2 வகையான ஹேர் ஸ்ப்ரே..!

Hair Spray for Hair Growth in Tamil

முடி மிக வேகமாக வளர சக்திவாய்ந்த 2 வகையான ஹேர் ஸ்ப்ரே..! Hair Spray for Hair Growth in Tamil..!

முடி உதிவு பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை பெற விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்று நாம் முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய இன்று சக்தி வாய்ந்த ஹேர் ஸ்ப்ரே தயாரிப்பு முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஹேர் ஸ்ப்ரே தயார் செய்ய வெறும் இரண்டு பொருட்கள் மட்டுமே தேவைப்படும். அந்த இரண்டு பொருட்களும் நமது வீட்டு சமையலறையில் எப்பொழுதுமே இருக்கும். மேலும் இந்த ஹேர் ஸ்ப்ரே தயார் செய்ய அதிக நேரம் ஆகாது மிக எளிதாகவே தயார் செய்துவிடலாம். சரி வாங்க ஹேர் ஸ்ப்ரே தயார் செய்யும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் ஸ்ப்ரே தயார் செய்யும் முறை – Hair Spray for Hair Growth in Tamil: 1

தேவையான பொருட்கள்:

  • அரிசி – ஸ்பூன்
  • கிராம்பு – ஒரு ஸ்பூன்
  • தண்ணீர் – டம்ளர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1½ ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் கிராம்பு, தண்ணீர் 2½ டம்ளர் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்கவைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைக்கவும். தண்ணீர் நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் ஸ்பிரேவை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்து, 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பிறகு ½ மணி நேரம் கழித்து தலை அலசவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நீங்கி. முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலை முடி முழுவதும் வெள்ளையாக இருந்தாலும் இந்த தேங்காய் எண்ணெய் போதும் உங்கள் முடியை கருமையாக மாற்றுவதற்கு

ஹேர் ஸ்ப்ரே தயார் செய்யும் முறை – Hair Spray for Hair Growth in Tamil: 2

தேவையான பொருட்கள்:

  • கிராம்பு பவுடர் – ஒரு ஸ்பூன்
  • தண்ணீர் – 2½ டம்ளர்
  • பிரியாணி இலை – மூன்று

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கிராம்பு பவுடர், தண்ணீர் 2½ டம்ளர் மற்றும் பிரியாணி இலை மூன்று ஆகியவற்றை சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை அடுப்பில் கொதிக்கவிடவும்.

பின்பு அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும். நன்கு ஆறியதும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஸ்ப்ரேவையும் தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்து கொண்டு சிறிது நேரம் தாலிக்கு மசாஜ் கொடுக்கவும். பின்பு ½ மணி நேரம் கழித்து தலை அலசவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நீங்கி. முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உருளைக்கிழங்கு சாறுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! செம கலரா ஆகிடுவீங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil