ஹென்னா பவுடர் மட்டும் போதும் உங்கள் முடி நீளமாக வளர..

Henna Hair Pack for Hair Growth in Tamil

ஹென்னா பவுடர் மட்டும் போதும் உங்கள் முடி நீளமாக வளர..! Henna Hair Pack for Hair Growth in Tamil..!

பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது தங்கள் தலைமுடிக்கு தான். தலை முடியை நன்கு வளர்க்க பலவகையான டிப்ஸினை பாலோ செய்வார்கள். இருந்தாலும் அனைவருக்கும் அனைத்து டிப்ஸும் கைகொடுத்துவிடாது. சிலருக்கு பலனளிக்கும், சிலருக்கு பலனளிக்காது. தலைமுடியை பராமரிக்க விரும்புபவர்கள் இயறக்கை வழிகளை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அப்பொழுது தான் நமது முடிக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. சரி இன்றைய பதிவில் தலை முடியை அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர செய்ய ஒரு ஹேர் பேக் தயாரிக்கும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • மருதாணி பவுடர் (ஹென்னா) – ஒரு கப்
  • கற்றாழை ஜெல் – 1/2 மடல்
  • தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
  • கடுகு எண்ணெய் – ஒரு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
வழுக்கை தலையிலும் முடி வளர தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் போதும்

மருதாணி ஹேர் பேக் செய்முறை – Henna Hair Pack for Hair Growth in Tamil:Henna Hair Pack for Hair Growth in Tamil

ஸ்டேப்: 1

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மருதாணி பவுடர் ஒரு கப், அரைத்த ஆலிவேரா ஜெல், தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி ஒரு ஹேர் பேக் போல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து மீண்டு ஒரு முறை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு இந்த கலவையை 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 4

மூன்று மணி நேரம் கழித்து இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்தலாம். ஆக இந்த ஹேர் பேக்கை தலையில் நன்றாக அப்ளை செய்து 1 மணி நேரம் வரை காத்திருக்கவும். பின்பு தலைக்கு மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசவும்.

இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வந்தாலே போதும் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும், சாப்ட்டாகவும், சைனிங்காகவும் வளர ஆரம்பிக்கும். குறிப்பாக முடி உதிர்வு பிரச்சனை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.

குறிப்பு: சளி, இருமல், தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த வேண்டாம். இவற்றில் சேர்க்கப்ட்டுள்ள பொருட்கள் அனைத்தும் குளிர்ச்சியானது என்பது இந்த பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும். ஆக இந்த பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil