வளரவே வளரதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கும் இதை தேய்த்தால்..!

Herbal Hair Wash Powder in Tamil

வளரவே வளரதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கும் இதை தேய்த்தால்..! Herbal Hair Wash Powder in Tamil

தலைமுடிக்கான பிரச்சனைகள் அதிகரிப்பதினால் அனைவருக்கும் அதை பாதுகாப்பதும் சிரமமாக இருக்கிறது. இதனால் தலைமுடியை பாதுகாப்பை பொறுத்தவரை கெமிக்கல் இல்லாத இயற்கைக்கு மாற விரும்புகிறார்கள். மேலும் அதிகரித்து வரும் இளநரை, வறட்சி, செம்பட்டை என்று முடியின் நிறங்களை மாற்றாமல் இருக்க இயற்கை தான் சிறந்தது என்பதை உணர ஆரம்பித்துவிட்டனர். அதனால் எல்லோரும் இயற்கை முறையில் அழகை பராமரிக்கவே விரும்புகிறார்கள். தலைமுடியை பொறுத்தவரை முடியை சுத்தம் செய்ய பயன்படுத்துவதில் முதல் இடம் சீயக்காய்க்கு தான் என்பது தெரியும். ஆனால் அதனோடு எதையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். சீயக்காயை தலைக்கு உபயோகப்டுத்துவதால் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சரி வாங்க இந்த சீயக்காயை எப்படி தயார் செய்ய வேண்டும் மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சீயக்காய் தூள் அரைக்க தேவையான பொருட்கள் – Herbal Hair Wash Powder Ingredients in Tamil:Herbal Hair Wash Powder

  1. சீயக்காய் – மூன்று கிலோ
  2. வெந்தயம் – 600 கிராம்
  3. பாசிப்பயிறு – ¾ கிலோ
  4. பூந்திக்கொட்டை – ½ கிலோ
  5. காய்ந்த நெல்லிக்காய் – 300 கிராம்
  6. காய்ந்த ஆவாரம்பூ – 200 கிராம்
  7. காய்ந்த செம்பருத்தி பூ – 100 கிராம்
  8. காய்ந்த ரோஜா பூ – 100 கிராம்
  9. வெட்டிவேர் – 100 கிராம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்ல Result கிடைக்க இதை Follow பண்ணி பாருங்களன்..!

சீயக்காய் அரைக்கும் முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒருநாள் முழுவது வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மெஷினில் அரைத்துவரவும்.

பிறகு ஒரு அகலமான தட்டில் அரைத்த சீயக்காய் தூளை நன்றாக உளரவிடவும். பிறகு ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் கொட்டிவைத்து பயன்படுத்தலாம்.

சீயக்காய் பயன்படுத்தும் முறை:

உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு சீயக்காய் பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு முதல் நாள் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். பிறகு நன்றாக ஊறவிடவும். அதற்குள் உங்கள் தலையில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்த பின் கலந்து வைத்துள்ள சீயக்காயை தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உதிர்ந்த முடி அனைத்தும் வளர இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்..!

பயன்கள்:

இந்த சீயக்காய் தூளை வாரத்தில் இரண்டு முறை தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு நீங்கி, தலைமுடி நீளமாக, அடர்த்தியாக, கருமையாக வளர ஆரம்பிக்கு. பொடுகு, அரிப்பு இது போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் சீயக்காய் தூளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே தலைமுடியை ஆரோக்கியமாகவும், போஷாக்குடனும் வளர உதவி செய்யும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil