Home Remedies for Hair Growth and Thickness in Tamil..!
Home Remedies for Hair Growth and Hair Fall in Tamil – பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருப்பது முடி வளர்ச்சிக்கு உதவும் டிப்ஸை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன் முடி உதிர்வு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று முதலில் தெரிந்துகொள்வோம். அதிகப்படியான முடி உதிவு ஏற்பட்டு முடி ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் தலைமுடி வேர்களில் வலிமை இல்லையென்றால் அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். அல்லது முடியை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும், அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக அடர்த்தி குறைவான முடி இருக்கிறது என்றால் உங்களுக்கு அடர்த்தி குறைவான முடி தான் இருக்கும். அல்லது நீங்கள் ஏதாவது உடல் சார்ந்த பிரச்சனைக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு வந்திருந்தாலும் உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். இது போன்று நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி இயற்கையான முறையில் முடி அடர்த்தியாக மற்றும நீளமாக வளர இரண்டு வகையான டிப்ஸை பார்க்கலாம் வாங்க.
Home Remedies for Hair Growth and Hair Fall in Tamil
தலைமுடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்:
தேவையான பொருட்கள்:
- வெந்தயம்
- வாழைப்பழம்
- முட்டை
- தயிர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வழுக்கையாக உள்ள இடத்திலேயும் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!
செய்முறை: முதல் நாள் இரவே 1 1/2 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்கவும். பின் மறுநாள் அந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு வாழைப்பழத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், பின் அதனுடன் 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அந்த பேஸ்டை நன்றாக வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
இப்பொழுது ஹேர் பேக் தயார் இந்த ஹேர் பேக்கை தலையில் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கவும்.
இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்வதன் மூலம் தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.
முடி உதிர்வை தடுக்க ஹேர் ஸ்ப்ரே:
தேவையான பொருட்கள்:
- பிரிஞ்சி இலை
- கொரகொரப்பாக அரைத்த வெந்தயம்
- கொரகொரப்பாக அரைத்த கருஞ்சீரகம்
- தண்ணீர் ஒரு டம்ளர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடியின் வளர்ச்சியை 2 மடங்கு அதிகரிக்க செய்வதற்கு இயற்கையான முறையில் தயாரித்த இந்த எண்ணெயினை பயன்படுத்துங்க..!
செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும், தண்ணீர் சூடானதும் இரண்டு பிரிஞ்சி இலை, ஒரு ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்த வெந்தயம், ஒரு ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்த கருஞ்சீரகம் ஆகியவற்றை செய்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்து 1/2 டம்ளர் அளவு வந்ததும் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை நன்றாக ஆறவைக்கவும். பிறகு அதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி, தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்யுங்கள்.
பிறகு 15 நிமிடம் கழித்து நீங்கள் எப்போது போல தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கலாம். இவ்வாறு வாரத்தில் ஒரு மூன்று முறை செய்து வந்தால் தலை முடி உதிர்வு முழுமையான நின்று முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |