முகத்தில் உள்ள பிம்பிள் இரண்டு நாட்களில் நீங்க இதை அப்ளை பண்ணுங்கள்..!

Advertisement

முகத்தில் உள்ள பிம்பிள் இரண்டு நாட்களில் நீங்க இதை அப்ளை பண்ணுங்கள்..! Home Remedies to Clear Acne/ Pimples in 2 Days..!

பொதுவாக முகத்தில் பரு வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதாவது எண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக ஏற்படும், ஹார்மோன்கள் காரணங்களினால் கூட ஏற்படும். இந்த முகப்பருவை பெரும்பாலானோர் கிள்ளிவிடுவார்கள். இதனால் அந்த இடத்தில் பள்ளங்கள் ஏற்படும் அதன் பிறகு முகத்தின் அழகையே அந்த பள்ளங்கள் கெடுத்துவிடும். பரு பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளவும். மேலும் வீட்டில் இருக்கும்போதும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறையாவது முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகும், பொலிவாகும். பருக்கள் வராமல் இருப்பதற்கு முகம் சுத்தமாக இருப்பது மிக அவசியம். சரி இன்றைய பதிவில் முகப்பரு இரண்டு நாட்களில் நீங்க இரண்டு அழகு குறிப்பு டிப்ஸை பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies to Clear Acne in 2 Days in Tamil – Remedy: 1

தேவையான பொருட்கள்:

  1. மோர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – ஒரு டேபிள் ஸ்பூன்
  3. சோம்பு நீர் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:Home Remedies to Clear Acne in 2 Days in Tamil

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மேல் கூறப்பட்டுள்ள மோர், கற்றாழை ஜெல் மற்றும் சோம்பு நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். பிறகு ஒரு காட்டன் பஞ்சியை இந்த கலவையில் டிப் செய்து முகப்பரு உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். பிறகு 20 நிமிடம் காத்திருக்கவும், தினமும் இந்த டிப்ஸை செய்து வர இரண்டு நாட்களிலேயே முகப்பரு அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஐந்தில் எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே முகப்பருக்கள் மறைந்து விடும்

Home Remedies to Clear Acne in 2 Days in Tamil – Remedy: 2

தேவையான பொருட்கள்:

  • விழுதாக அரைத்த பப்பாளி – இரண்டு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு பவுலில் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்டை உங்கள் முதலில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை செய்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். மேலும் பப்பாளி முகத்தை நன்கு பிரகாசமாக வைத்துக்கொள்ளும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகப்பரு வராமல் தடுக்கவும், பரு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிஞ்சுக்கோங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement