கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சாறுடன் இதை மட்டும் கலந்து முகத்தில் மாஸ்க் போடுங்கள் முகம் பொலிவு பெரும்..!

Homemade Face Mask for Glowing Skin in Tamil

வீட்டில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் செய்முறை | Homemade Face Mask for Glowing Skin in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான அழகு குறிப்பு பதிவை பற்றி தான் பார்க்க போகிறோம். சருமத்தின் பொலிவை அதிகரிக்க பலவகையான விஷயங்களை நாம் செய்து தான் வருகிறோம்.. சருமத்திற்கு அடிக்கடி மாஸ்க் போடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா.. அதற்காக கடைகளில் விற்கப்படும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்துகிறீர்களா.. இனி வீணாக இதற்காக காசு செலவழிக்க வேண்டாம். வீட்டிலேயே மிக எளிதாக ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யலாம். சரி வாங்க அந்த ஃபேஸ் மாஸ்க் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 1
  • உருளைக்கிழங்கு – 1
  • Gelatin Powder அல்லது கடல் பாசி – 1/2 ஸ்பூன்

ஃபேஸ் மாஸ்க் செய்முறை:

முதலில் கேரட் மற்றும் உருளைக்கிழங்களை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.

பிறகு அதன் மீது உள்ள தோல் பகுதியை நீக்க வேண்டும்.

அதன் பிறகு இரண்டையும் தனியாக சீவும் கட்டையால் நன்றாக சீவிக்கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றின் மீது ஒரு வடிகட்டிய வைத்து துருவிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கில் இருந்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அவற்றில் 1/2 ஸ்பூன் Gelatin Powder அல்லது கடல் பாசி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் இந்த கலவையை மாற்றி 2 நிமிடம் மட்டும் நன்றாக சூடுபடுத்தவும் அதாவது ஒரு கொத்தி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்த கலவையை நன்றாக ஆறவைக்கவும்.

கலவை நன்கு ஆறியதும் ஒரு பிரஷை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இந்த கலவையை நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருந்து மாஸ்க்கை அகற்றிவிடலாம். மாஸ்க்கை அகற்றும் போது அதுவே அழகாக உரிந்து வரும்.

இப்படி நீங்களே வீட்டில் ஃபேஸ் மாஸ்க் தயார் செய்துகொள்ளலாம்.

பயன்கள்:

இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகம் பொலிவுடன் காணப்படும்.

முக சுருக்கம் மறையும், முகம் சாப்டாக இருக்கும்.

குறிப்பாக இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமைகள் மருந்து முகம் பளிச்சென்று காணப்படும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்தில் இரண்டு முறை முகத்திற்கு பயன்படுத்தலாம். நல்ல பலன்கள் கிடைக்கும் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை வெள்ளையாக்கலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami