Homemade Face Pack for Glowing Skin in Tamil..!
Skin Whitening Facial at Home in Tamil:- பெண்கள் பொதுவாக ஏதாவது விசேஷங்களுக்கு செல்லும் போது முகத்தை வசீகரமாக வைத்து கொள்ள சில வகையான பேசியலை செய்வார்கள். முகத்துக்கு பேசியல் செய்தால் பளிச்சென்று மாறும், மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்மடுத்தும். முகத்தில் இறந்த செல்களை அகற்றும். எனவே இத்தகைய பேசியலை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் செய்வதன் மூலம் இன்னும் அதிக பலன் கிடைக்கும். சரி இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிய முறையில் சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.
முகத்தின் அழகை அதிகரிக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள பேசியலை step by step ஆக செய்து வருவதன் மூலம் பியூட்டி பார்லரில் செய்யும் கோல்டன் பேசியலை விட நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க பேசியல் எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
Skin Whitening Facial at Home in Tamil..!
Step:1 cleansing
முகத்திற்கு பேசியல் செய்வதற்கு முன் முதலில் கிலேசன்சிங் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சிறிதளவு காய்ச்சாத பசும் பாலை எடுத்து கொள்ளுங்கள்.
பின் கார்டன் பஞ்சியினால் அல்லது துணியினால் பாலினை நனைத்து முகத்தை தொடைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று சருமம் சுத்தமாக இருக்கும். அடுத்ததாக ஸ்டேப் 2-யில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.
Step: 2 Scrub
அடுத்ததாக முகத்திற்க Scrub செய்ய வேண்டும். இந்த scrub போடுவதற்கு முன் முகத்தை கழிவி கொண்டு ஈரப்பதத்துடன் scrub-யினை போட வேண்டும்.
இதற்கு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 1/2 ஸ்பூன் கேரட் ஜூஸ் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு முகத்தில் எங்கெல்லாம் கருமையாக இருக்கின்றதோ அந்த இடங்களில் எல்லாம் இந்த கலவையை அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
Step: 3 Massage Cream
முகத்திற்கு Scrub செய்தபிறகு முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் இரண்டு ஸ்பூன் கேரட் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது massage cream தயார் இந்தனை முகத்தில் அப்ளை செய்து குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஐந்து நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சருமத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இதனால் சருமம் என்று இளமையுடன் காணப்படும்.
Step: 4 face pack
இறுதியாக செய்யக்கூடிய ஸ்டேப், ஃபேஸ் பேக் இதற்க்கு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தேவையான அளவு கேரட் ஜூஸ் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் face pack இப்பொழுது தாயார்.
இதனை முகத்தில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் வேண்டும். பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
முகத்தை அழகுபடுத்த இதற்காக பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை வீட்டிலேயே இந்த பேசியலை செய்தாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கண்டிப்பா ஒரு முறை இந்த பேசியலை பாலோ பண்ணுங்க. முகத்திற்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |