பொலிவான சருமத்தை பெற எளிய பேஷியல் டிப்ஸ்..! How to Clean Face at Home Naturally in Tamil..!

How to Clean Face at Home Naturally in Tamil

சருமம் பொலிவு பெற எளிய பேஷியல் டிப்ஸ்..! Natural facial tips in tamil..!

How to Clean Face at Home Naturally in Tamil:- வணக்கம் தோழிகளே இந்த பதிவில் பொலிவான சருமத்தை பெற வீட்டில் இருந்து செய்யக்கூடிய எளிய பேஷியல் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக பெண்கள் சரும அழகை அதிகரிக்க பேஷியல் செய்வார்கள். முகத்திற்கு பேஷியல் செய்வதினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவினை தரும்.

இந்த பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் மாசுக்கள், அழுக்குகள் போன்றவை அகன்று சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும். எனவே இப்பொழுது பொலிவான சருமத்தை பெற எளிய பேஷியல் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் 👉 ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..!

How to Clean Face at Home Naturally in Tamil..!

கீழே Step  முதல் 5 Step வரை முகத்தில் பேசியல் செய்வதற்கு அழகு குறிப்பு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே இந்த 5 Steps-யும் தொடர்ச்சியான முறையில் செய்ய வேண்டும்.

Step: 1 cleanser

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன்  ஆப்பிள் சிடர் வினிகர் (Apple cider vinegar) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் ஒரு காட்டன் பெட் (cotton pads) எடுத்து இந்த கலவையில் நனைத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு முகத்தில் அப்ளை செய்வதினால் சருமத்தில் இருக்கும் மாசுக்கள், அழுக்குகள் போன்றவை அகன்று சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

மேலும் சருமத்தில் ஏற்படும் பருக்கள் அகன்று சருமம் மென்மையாக காணப்படும்.

Step: 2 Face scrubbing

இப்பொழுது முகம் பொலிவு பெற Face scrubbing எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதற்கு ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பிறகு இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு சாறு இவை இரண்டும் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையை அகற்றி சருமத்தை பிரகாசமாக வைத்து கொள்ளும். சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

இதையும் படியுங்கள் 👉 சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..!

How to Clean Face at Home Naturally in Tamil Step: 3

முகத்தில் Face scrubbing செய்த பிறகு முகத்தை கழுவாமல் சிறிது நேரம் முகத்தில் நீராவி (steam) பிடிக்க வேண்டும். பின் மீண்டும் சில நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகத்தில் நீராவி பிடிப்பதினால் சருமம் மென்மையாகும், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும், சரும செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Step: 4 Massage 

அடுத்ததாக சருமத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமம் மென்மையாக்குவதுடன், சருமம் செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

Step: 5 Face pack

அடுத்ததாக சருமத்திற்கு ஃபேஸ் பேக் தயார் செய்ய போகிறோம். இதற்கு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் முகத்தில் இதை நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். அதாவது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சரும வறட்சி, ஆயில் ஃபேஸ் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்யும்.

இதையும் படியுங்கள் 👉 15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க..!

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty Tips in Tami