இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா..! அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்…

Advertisement

வெள்ளை முடி கருப்பாக மாற

பொதுவாக தலையில் முடி வளர்ப்பது தான் பெரிய பிரச்சனை என்றால் அதற்கும் மேலாக ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என நிறைய நபர்களுக்கு உள்ள நரை முடி பிரச்சனை தான். நம்முடைய தலையில் ஒரே ஒரு நரை முடி வந்தாலே நம்மால் தாங்கி கொள்ள முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் சிலருக்கு தலையில் உள்ள முடியில் பாதி முடி நரை முடியாக மட்டுமே இருக்கும். நீங்களும் அந்த முடியினை எப்படியாவது கருப்பாக மாற்ற வேண்டும் என்று என்ன என்னவோ ஹேர் டை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு முழுமையான பலனை அளிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். உங்களுடைய நரை முடி பிரச்சனையை சரி செய்து முடியை கருப்பாக மாற்றுவதற்கான ஒரு ஹேர் டை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Dye Grey Hair Black Naturally:

 நரை முடி கருப்பாக இயற்கை டை

நரை முடி கருப்பாக மாற்றுவதற்கு வெறும் 2 பொருட்களை வைத்து இயற்கையான முறையில் முதலில் டை தயார் செய்ய வேண்டும். அது எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • மருதாணி இலை- 1 கைப்பிடி அளவு 
  • அவுரி பொடி- 2 தேக்கரண்டி 
முடியின் வளர்ச்சிக்கு எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை பண்ணுங்க

இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி..?

குறிப்பு- 1

 இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி

மருதாணி பவுடர் தயார் செய்தல்:

 வைட்டமின் A, வைட்டமின் E, தாதுக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சைடுகள் என நிறைய சத்துக்கள் மருதாணியில் உள்ளது. ஆகையால் இதனை பொடியாக செய்து நரை முடிக்கு அப்ளை செய்வதும் மூலம் முடி கருப்பாக மாறிவிடும். 

அதனால் 1 கைப்பிடி அளவு மருதாணி இலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு கூட தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது.

கிண்ணத்தில் பவுடரை சேர்த்தல்:

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அரைத்து வைத்துள்ள மருதாணி பவுடர் 2 ஸ்பூன் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலந்து கொள்ள 1 மணி நேரம் அப்படியே வைத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டை தயார்.

முடிக்கு அப்ளை செய்யும் முறை:

1 மணி நேரம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் டை தலையில் நரை முடி உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு ஷாம்பு எதுவும் போடாமல் தலை குளித்து விடுங்கள்.

 

ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…

குறிப்பு- 2

narai mudi karuppaga maara

இப்போது ஒரு கிண்ணத்தில் அவுரி பவுடர் 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் அவுரி பொடி ஹேர் டை தயார்.

முடிக்கு பயன்படுத்தும் முறை: 

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள அவுரி பொடி ஹேர் பேக்கை முடியில் நன்றாக அப்ளை செய்து அது காய்ந்த பிறகு முடியினை ஷாம்பு போடாமல் தலை குளித்து விடுங்கள்.(குறிப்பு: மருதாணி ஹேர் பேக் போட்டு ஒரு நாள் விட்டு தான் அவுரி பொடி ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும்)

இதனை மட்டும் நீங்கள் மாதம் 1 முறை செய்தால் போது நரை முடி கருப்பாக மாறி இருப்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement