How To Get Fair Skin in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான அழகு குறிப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். அனைத்து பெண்களுக்குமே முகம் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெண்கள் எத்தனையோ முயற்சிகளை செய்கின்றனர். அதுபோல நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு பலனளிக்க வில்லையா..? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க உங்கள் முகம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்.
Fair Skin Tips in Tamil:
உங்களுடைய முகம் மற்றும் உடலை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு இந்த குளியல் பொடி மட்டும் போதும். இதை நீங்கள் தினமும் தேய்த்து குளித்து வந்தால் முகம் மற்றும் உடல் பளபளப்பாக மாறும். முகத்தை பொலிவாக மாற்றும் குளியல் பொடி எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- பச்சை பயிறு – 100 கிராம்
- முட்டையின் வெள்ளை கரு – 2
ஸ்டேப் – 1
முதலில் ஒரு தட்டில் பச்சை பயிரை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் – 2
பின் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைக்க வேண்டும்.
ஸ்டேப் – 3
அதுபோல, அதை ஒரு ஸ்பூனை வைத்து திருப்பி விட்டு மறுபடியும் வெயிலில் 1 நாள் முழுவதும் காயவைக்க வேண்டும். அப்போது தான் அது ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்.
ஸ்டேப் – 4
பச்சை பயிர் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்ததும் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் அரைத்து வைத்துள்ள இந்த பவுடரை தினமும் தேய்த்து குளித்து வரலாம். இப்படி குளித்து வருவதால் உங்கள் முகம் மற்றும் உடல் பொலிவு பெறும். அதுபோல முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |