Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to get Pink Lips Permanently in Tamil

பொதுவாக பெண்களுக்கு தங்களின் முகத்தை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் உதடுகள் எப்பொழுதும் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரின் உதடுகள் கருமையாக இருக்கும். அதனை நினைத்து அவர்கள் மிகவும் வருந்துவார்கள் அதனை மறைப்பதற்காக கடைகளில் விற்கப்படும் பல வேதிப்பொருட்கள் கலந்துள்ள Lip Stick-யை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி வேதிப்பொருட்கள் கலந்துள்ள Lip Stick-யை வாங்கி பயன்படுத்துவதால் உங்களின் உதடுகளுக்கு மிகுந்த தீமைகளை விளைவிக்க கூடும். அதனால் தான் இன்றைய பதிவில் Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி கருமையாக உள்ள உங்களின் உதடுகளை சிவப்பாக மாற்றி கொள்ளுங்கள்.

How to Get Pink Lips Naturally in a Week in Tamil:

How to get Pink Lips Naturally in a Week in Tamil

Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  2. சர்க்கரை – 2 டீஸ்பூன்
  3. தேன் – 2 டீஸ்பூன்

பாதாம் எண்ணெயை எடுத்து கொள்ளவும்:

How to get pink lips overnight in tamil

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயினை சேர்த்து லேசாக சூடுபடுத்தி ஒரு கிண்ணத்தில் அல்லது சிறிய பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கருமையாக உள்ள உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

தேனை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் உதடுகளில் தடவி லேசாக மசாஜ் செய்து 10 – 15 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.

பிறகு வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி உங்களின் உதடுகளை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் கருமையாக உள்ள உங்களின் உதடுகள் சிவப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சிவப்பான உதடு பெற இதை செய்தால் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement