வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டிலேயே HAIR கலர் செய்திடலாம்..! அதுவும் இயற்கை முறையில்..!

Updated On: September 20, 2024 12:27 PM
Follow Us:
how to make pink hair dye at home in tamil
---Advertisement---
Advertisement

Hair Color Home Remedy in Tamil

அனைவருமே படத்தில் ஹீரோயினுக்கு இருக்கும் தலை முடி போல் வளர்க்க வேண்டும். அது போல் கலர் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் நம் வீட்டில் லேசாக காபி நிறத்தில் தலை முடி மாறினால் ஏன் இப்படி உள்ளது என்று சொல்லி கருமை நிறமாக மாற்றுவதற்கு நிறைய செய்து வருகிறார்கள்.

ஆனால் நமக்கு பிங்க், பிரவுன் ஏன நிறைய விதமான கலர் தான் பிடித்திருக்கிறது. அது போல் மாற்றிக்கொள்ள பியூட்டி பார்லருக்கு போனால் அது தலை முடிக்கு கேடு தரும் என்று சொல்லி வீட்டில் இருப்பவர்கள் விட மாட்டார்கள். அதனால் தான் வீட்டிலேயே எப்படி தலை முடியை கலர் செய்வது என்று பார்க்க போகிறோம் வாங்க..!

How to Make Pink Hair Dye at Home in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. டீ தூள் – 5 டேபிள் ஸ்பூன்
  2. பீட்ரூட் –
  3. Henna Powder – 100 கிராம்
  4. எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
  5. முட்டை – 1
  6. காபி தூள் – 3 டீஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

ஸ்டேப்: 1

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிவிடவும் அதில் டீ தூள் சேர்த்து கொத்திக்கவிடவும்.  அது நன்றாக கொதித்த பின் அதனை வடிகட்டி அதனுடைய தண்ணீரை  தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 2

உங்களுடைய முடி நீளமாக இருக்கும் என்றால் 2 அல்லது 3 பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளவும். அதை துண்டாக துண்டாக நறுக்கி 2 டேபிள் தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். அதுவும் டீ தூள் போல் நிறம் மாறி வரும் போது இறக்கி வடிகட்டி தனியாக வைக்கவும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!

ஸ்டேப்: 3

இப்போது 100 கிராம் அளவிற்கு Henna Powder எடுத்துக்கொள்ளவும். அதில் வடிகட்டி வைத்துள்ள டீ தூள் தண்ணீர், பீட்ரூட் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தலைக்கு தேய்க்கும் அளவிற்கு கலந்துவைக்கவும்.

கலந்த பவுடரை இரவு முழுவதும் வைத்து அல்லது 12 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

உங்களுக்கு பிங்க் பிடிக்கவில்லை என்றால் காபி தூள் நிறத்தில் வேண்டுமென்றால் அதற்கு எதாவது ஒரு காபி தூள் பவுடர் 3 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

அதேபோல் முட்டையின் வெள்ளைக்கரு, 2 டேபிள் ஸ்பூ தேங்காய் எண்ணெய் எடுத்து  12 மணி நேரம் ஊறவைத்த பவுடரில் கலந்துவிடவும். இப்போது தலையில் தேய்க்கும் அளவிற்கு ஒரு கெட்டியான பதம் இருக்கும்.

அதனை தலையில் தடவி 2 மணி நேரம் ஊறவிட்டு எப்போதும் போல் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்துவிட்டால் உங்கள் தலை முடி கலர் மாறிவிடும்.

மேலும் பிங்க் நிறத்தில் தலை முடி வேண்டுமென்றால் பீட்ரூட் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், காபி தூள் சேர்க்க வேண்டாம். 

குறிப்பு – 🙏👉 குளிர்ச்சி அதிகம் உள்ளவர்கள் இதனை செய்வதை தவிர்க்கலாம். 

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
நரைமுடி நிரந்தரமாக கருப்பாக இயற்கை முறையில் இதை ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now