How to Remove Black Spots From Face at Home in Tamil
இன்றைய சுற்றுசூழல் காரணமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பருக்கள் வருவது சகஜமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி வரும் பருக்கள் நீங்கினாலும் அவைகளால் ஏற்படும் கரும்புள்ளிகள் உங்களின் முகத்தின் பொலிவை குறைக்கிறது. அப்படி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கான சில டிப்ஸ்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்னென்ன டிப்ஸ்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Black Marks on Face Quickly in Tamil:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கான சில டிப்ஸ்களை பற்றி விரிவாக காணலாம்.
டிப்ஸ் – 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு – 1 சிறியது
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனின் தோல்களை நீக்கிக் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பாலினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> 2 நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளி காணாமல் போக இந்த டிப்ஸ் மட்டும் போதும்
பின்னர் அதில் ஒரு காட்டன் துணியை நனைத்து உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்கள் முகத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகளும் நீங்கி உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
டிப்ஸ் – 2

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- கிராம்பு – 10
- தண்ணீர் – 1 டம்ளர்
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் 1 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் 10 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு காட்டன் துணியை நனைத்து உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்கள் முகத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகளும் நீங்கி உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














