ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷ் அகற்றலாம்.. எப்படி தெரியுமா?

How to Remove Nail Polish Naturally in Tamil

நெயில் பாலிஷ் ரிமூவர் – How to Remove Nail Polish Naturally in Tamil

பொதுவாக பெண்களுக்கு நெயில் பாலிஷ் போடுவதற்கு மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக சில பெண்கள் அவர்களது ஆடைகளின் நிறத்திற்கு ஏற்ப நெயில் பாலிஷை போட்டுக்கொள்வார்கள். சில பெண்கள் நெயில் பாலிஸிலேயே வித விதமான டிசைன்களை வைத்து போட்டுக்கொள்வார்கள். இருப்பினும் அந்த நெயில் பாலிஷை ரிமூ செய்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். அதற்காக பலர் ரிமூவரை பயன்படுத்துவார்கள். இனி இதற்கெல்லாம்  நீங்கள் செலவு செய்ய வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. இங்கு ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை எப்படி எளிமையாக அகற்றலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம் ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

நெயில் பாலிஷ் ரிமூவர்:

டிப்ஸ்: 1

விரல் நகத்தில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவ் செய்ய டியோடரன்ட் பயன்படுத்தலாம். அதாவது முதலில் வர்ணம் பூசப்பட்ட நகங்களில், ஸ்பிரே செய்யவும், பின்னர் காட்டன் பேடைப் பயன்படுத்தி தேய்க்கவும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம், மேலும் ரிமூவர் போல் விரைவாக முடிவுகளைத் தராது. இருந்தாலும், இது வேலை செய்யும்.

டிப்ஸ்: 2

பல் துலக்கும் டூத்பேஸ்ட் கூட உங்கள் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்க பயன்படுகிறது. பழைய டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, நகங்களில் சிறிது டூத்பேஸ்டை தேய்த்தால் போதும். பொதுவாக டூத்பேஸ்ட்டில் எத்தில் அசிடேட் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆகவே நீங்கள் டூத்பேஸ்டை பயன்படுத்துவதன் மூலம் மிக எளிதாக நெயில் பாலிஷை மிக எளிதாக அகற்ற முடியும்.

டிப்ஸ்: 3

ஹேண்ட் சானிடைசர் கூட நெயில் பாலிஷை அகற்றுவதற்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் சிறிதளவு ஹேண்ட் சானிடைசர் ஸ்ப்ரே செய்து நகங்களில் உள்ள  நெயில் பாலிஷில் வைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மிக எளிமையாக நெயில் பாலிஷை அகற்றிவிட முடியும்.

டிப்ஸ்: 4

தோழிகளே டியோடரன்ட் போலவே, பர்ஃபியூமை நெயில் பாலிஷ் ரிமூவ் செய்வதற்கு பயன்படுத்தலாம். ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது பர்ஃபியூம் எடுத்து, அதை உங்கள் நகங்களில் தேய்க்கவும். இவ்வாறு செய்வதினால் மிக எளிதாக நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்றிவிடலாம்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty Tips in Tamil..!