காய், பழ தோலை தூக்கி எறியாதீர்கள்.. நரை முடிக்கு ஹேர் டை இயற்கையாக தயாரிக்கலாம்..!

Advertisement

காய்கறி மற்றும் பழ தோல் ஹேர் டை தயாரிப்பு | How to Remove Permanent Hair Dye Naturally at Home in Tamil

பொதுவாக அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் இப்போது உள்ள லைப் ஸ்டைல் காரணமாக. பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனை வந்துவிடுகிறது. இந்த நரை முடியை மறைக்க பலர் கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்துகின்றன. அதனை பயன்படுத்தியவுடன் தலைமுடி கருமையாக மாறிவிடுகிறது. ஆனால் அதன் மூலம் நிறைய பக்க விளைவுகளை பிற்காலத்தில் சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆக நரை முடியை  மறைய செய்ய இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் மிகவும் சிறந்தது. அதுவும் வேஸ்ட்டாக தூக்கி எறியும் காய்கறி மற்றும் பழத்தோலை வைத்து ஹேர் டை தயார் செய்யலாம். சரி வாங்க இயற்கையான முறையில் ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கறிவேப்பிலை – ஒரு கையளவு
  2. கொய்யா இலை – 10
  3. ஒரு மாதுளை பழத்தின் தோல்
  4. பீட்ரூட் தோல் – ஒரு கையளவு
  5. எலுமிச்சை பழம் தோல் – இரண்டு
  6. செம்பருத்தி இலை – 2
  7. டீத்தூள் – 2 ஸ்பூன்
  8. அவுரி பொடி – இரண்டு ஸ்பூன்
  9. மருதாணி பவுடர் – உங்கள் தலை முடிக்கு தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கருக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் மீண்டும் அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். பின் அதனுடன் பீட்ரூட் தோல், மாதுளை தோல், கொய்யா இலை, எலுமிச்சை தோல், டீத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். கலவையானது மேல் படத்தில்  காட்டியுள்ளது போல் மாறும் வரை கொதிக்க வைக்கவும். பின் பொடி செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலையை இந்த கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறிவிடுங்கள். பின் அடுப்பில் இருந்து இறக்கி இரும்பு வாணலியிலேயே 12 மணி நேரம் ஊறவைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  👇
நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க

ஸ்டேப்: 3

பின் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் மேல் துணி விரித்து ஊறவைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பின் இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் உங்கள் தலை முடிக்கு தேவையான அளவு மருதாணி பவுடரை சேர்க்கவும், பின் அதனுடன் வடிகட்டி வைத்துள்ள லிக்விடை சேர்த்து பேஸ்ட்டு போல் கலந்துகொள்ளுங்கள். பின் மீண்டும் 12 மணி நேரம் இந்த மருதாணி கலவையை ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

12 மணி நேரம் கழித்து அந்த கலவையை திறந்து பார்த்தால் நல்ல பிரவுன் மற்றும் பிளாக் நிறத்தில் இருக்கும். இதனை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இந்த முறையை தலைக்கு பயன்படுத்தலாம். நான்கு வாரத்தில் தலை முடி கருமையாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த டிப்ஸை ட்ரை செய்யுங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  👇
15 நாட்களில் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் புதிய முடிகளை வளர செய்யும்.. இதை மட்டும் தடவுங்கள்..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement