3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

Advertisement

வெள்ளை முடியை கருப்பாக்கும் கருவேப்பிலை ஹேர் டை செய்முறை..! Karuveppilai Hair Dye in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் நரை மற்றும் இளநரையை மாற்ற கூடிய ஒரு அருமையான கருவேப்பிலை ஹேர் டை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் நரை முடி பிரச்சனை என்பது சர்வ சாதரணமான விஷயமாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு முறை மற்றும் வாழ்கை முறையாகும். பொதுவாக நரை முடி வந்துடிச்சி அப்படினாலே கடைகளில் விற்கப்படும் அதிக கெமிக்கல் நிறைந்த கே=ஹேர் டையை பயன்படுத்துகின்றோம். இதனால் பலவாகியன் பக்கவிளைவுகளை கூட சந்திக்கின்றன. ஆக இயற்கையான முறையில் உங்கள் வீட்டிலேயே ஹேர் டை தயார் செய்து தலைக்கு பயன்படுத்த்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த வகையில் இப்பொழுது இயற்கையான முறையில் வெறும் மூன்று பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே கருவேப்பிலை ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு
  2. கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு கை முளைக்கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

கருவேப்பிலை ஹேர் டை செய்முறை:

முதலில் கருவேப்பிலை தூசிகள் இல்லாதவாறு நன்றாக சுத்தம் செய்து, நன்றாக அலசிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் உள்ள தண்ணீர் சுத்தமாக போகும் வரை வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் காயவைத்து எடுத்துள்ள கருவேப்பிலையை வறுக்க வேண்டும். கருவேப்பிலை நன்கு கருப்பாக மாறும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு நன்றாக ஆறவைக்கவும், கருவேப்பிலை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

நன்கு பவுடர் போல் அரைத்ததும் அதனை சல்லடையில் நன்றாக சலித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது தலை முடியை கருமையாக மாற்ற கருவேப்பிலை ஹேர் டை பவுடர் தயார். இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்கள் முடிக்கு தேவைப்படும் அளவிற்கு அரைத்த கருவேப்பிலை பவுடரை எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இதனை உங்கள் தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருங்கள். பிறகு தலைக்கு ஷாம்பு போட்டு தலை அலசுங்கள். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்தால் போதும் உங்கள் நரை முடி கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 முடி கொட்டுவதை நிறுத்தி முடி நீளமாக அடர்த்தியாக 100% வளர இந்த ஹேர் டானிக்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement