குங்குமாதி தைலம் பயன்கள் | Best Kumkumadi Tailam for Skin Whitening in Tamil
சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க அனைவருமே ஆசைப்படுவோம். ஆனால் என்ன காலநிலை மாற்றத்தால் பலருக்கும் ஒவ்வொரு விதமான சரும பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கிறது. சருமம் அழகாக இருப்பதற்கு கடைகளில் அழகு சாதன பொருள் விற்கப்படுகிறது. அதனை வாங்கி நாம் முகத்தில் தடவி வருகிறோம். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இயற்கை முறையில் நாம் சருமத்தை பாதுகாத்தால் எப்போதும் முகம் தங்கம் போல் மின்னும். வாங்க நாம் இன்றைய அழகு குறிப்பு பகுதியில் கும்குமதி தைலம் பயன்படுத்தி சருமத்தை எப்படி வெள்ளையாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிஞ்சிக்கலாம்.
நால்பாமராதி தைலம் நன்மைகள் |
குங்குமாதி தைலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
அனைத்து வகை சருமத்தினரும் இந்த தைலத்தை பயன்படுத்தலாம். முகத்தில் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அதிக நேரம் இந்த குங்குமாதி தைலத்தை உபயோகப்படுத்த வேண்டாம்.
குங்குமாதி தைலம் என்பது ஆயுர்வேதத்தில் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு அழகு சாதன பொருளாகும். இந்த தைலம் 21 மூலிகை பொருளால் ஆனது.
உபயோகிக்கும் முறை:
முகத்தில் குங்குமாதி தைலம் பயன்படுத்துவதற்கு முன்பு மேக் அப் பயன்பாடு இருத்தல் கூடாது. அப்படி மேக் அப் இருந்தால் அதை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
மேக் அப் கலைத்த பிறகு இலேசான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யவும். அதன் பிறகு சிறிது நேரம் முகத்தை காய விடவும்.
அடுத்து குங்குமாதி தைலத்தை சிறிது துளிகளை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்யும் போது அழுத்தம் தராமல் லேசாக செய்ய வேண்டும். இந்த எண்ணெய் பயன்படுத்திய பிறகு குறைந்தது 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்.
ஒரே வாரத்தில் பொலிவு பன்மடங்கு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் |
வறண்ட சருமத்தினருக்கு:
எப்போதும் வறண்டு போய் சருமத்தை உடையவர் குங்குமாதி தைலம் பயன்படுத்தும் போது சருமத்தின் வறட்சியை போக்க இரவில் இதை பயன்படுத்தி வரலாம். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு இதை முகத்தில் தடவி விடுங்கள். இரவு முழுவதும் முகத்தில் வைத்துவிட்டு மறுநாள் காலை முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்கள் அதிக நேரம் முகத்தில் வைக்காம 2 மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் சேராமல் பாதுகாத்துகொள்ளலாம்.
குங்குமாதி தைல ஃபேஸ் பேக் செய்முறை:
- முல்தானி மெட்டி – 2 டீஸ்பூன்
- குங்குமாதி எண்ணெய் – 2 டீஸ்பூன்
- பன்னீர் – 2 டீஸ்பூன்
- மேல் கூறிய முல்தானி மெட்டி, குங்குமாதி எண்ணெய், பன்னீர் மூன்றையும் பேஸ்ட் போன்று செய்துக்கொள்ளவும்.
- பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தடவி விடவும்.
- பிறகு 15 நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இறுதியாக மாய்சுரைசர் பயன்படுத்தவும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
என்னென்ன நன்மைகள்:
இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது.
முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடும்.
வாரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ் மாஸ்கினை பயன்படுத்தும்போது சருமமானது இளமை தோற்றத்தை கொடுக்கிறது.
சருமத்தில் இருக்கும் கருமை பிரச்சனைக்கு இந்த எண்ணெயை தொடர்ந்து 15 நாட்கள் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
கண்களுக்கு கீழ் இருக்கக்கூடிய வீக்கத்தை குறைக்க இரவு படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்பு 2- 3 துளிகள் எடுத்து, 5 முதல் 6 நிமிடங்கள் கண்களுக்கு மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம் குறைகிறது.
சருமம் ஜொலி ஜொலிக்க இந்த குங்குமாதி தைலத்தை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க..!
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க தீர்வு |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |