வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை டிப்ஸை Follow பண்ணுங்க.!

Updated On: December 20, 2023 6:27 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

முகம் பளபளப்பாக மாற

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் முகம் பளபளப்பாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் பளபளவென்று இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக நீங்கள் பல முறைகளை பயன்படுத்திருக்கலாம். அந்த முறைகள் எல்லாம் நிரந்தரமாக முகம் பளபளப்பை கொடுத்திருக்காது. காரணம் நீங்கள் கடையில் விற்கும் கிரீம்களை பயன்படுத்தியிருப்பீர்கள். வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து முகத்தை அழகு படுத்துங்கள். அந்த வகையில் முகம் பளபளப்பாகுவதற்கு சில குறிப்புகளை படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கேரட்டை வைத்து முகத்தை அழகாக்க முடியும் எப்படி தெரியுமா.?

முகம் பளபளக்க டிப்ஸ்:1

 முகம் பளபளக்க டிப்ஸ்

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி, விட்டமின் E மாத்திரையில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பின் கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, காபி தூள் 1/4 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 3 தேக்கரண்டி போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேக்கை கலந்த பிறகு மஞ்சள் நிறத்தில் கிடைக்கும். இந்த பேக்கை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.

அப்ளை செய்யும் முறை: 

கலந்து வைத்த பேஸ் பேக்கை முகத்தில் அப்பளை செய்து ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம். இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன் அப்ளை செய்து காலையில் முகத்தை கழுவி கொள்ளாலாம். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து அப்பளை செய்து வர முகம் பளபளப்பாக மாறி விடும்.

முகம் பளபளக்க டிப்ஸ்:2

 mugam palapalakka enna seiya vendum

இந்த குறிப்பை பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகுவதோடு, முகத்தை வெள்ளையாகவும் மாற்றும். அதற்கு கருப்பு திராட்சை 7 அல்லது 8 எடுத்துக்கொள்ளுங்கள். இந்த திராட்சை பழத்தின் உள்ள விதைகளை நீக்கி சாறுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

திராட்சை சாறுடன் தேன் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். உங்கள் வீட்டில் திராட்சை இருக்கும் போதெல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் இதற்காக வாங்கி வாரத்தில் 2 முறை இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். முகம் உடனடியாக பளபளப்பாக மாறி விடும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்துங்கள். எந்த குறிப்பையும் பயன்படுத்திய உடனே அதற்கான ரிசல்ட் கிடைக்காது. அதனால் நீங்கள் எந்த குறிப்பை பயன்படுத்தினாலும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதற்கான பலன் நன்றாகவே இருக்கும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now