முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவே மாட்டேங்குதா..! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Advertisement

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க

முகம் என்றாலே அனைவருக்கும் அதன் மீது ஒரு தனி கவனம் இருக்கும். முகத்தை எப்போதும் அழகாகவும் மற்றும் பொலிவுடன் வைத்து இருக்க வேண்டும் என்று தான் யாராக இருந்தாலும் நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்கும் போது தான் முகத்தில் பருக்கள் வந்து நமது ஆசையை கெடுத்துவிடும். பருக்கள் முகத்தில் இருந்து நீங்குவதற்கு என்ன தான் செய்தாலும் அது போகவே இல்லை என்பது தான் பலருடைய கவலையாக இருக்கிறது. இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்தே 5 நாட்களில் முகத்தில் இருக்கும் பொருட்களை கொண்டு பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 30 நாட்களில் எப்படிப்பட்ட மூக்கையும் அழகாக மாற்றலாம் எப்படி தெரியுமா..?

Mugathil Ulla Parukkal Neenga:

முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க மூன்று விதமான டிப்ஸினை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்- 1

பருக்களை நீக்குவது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. புதினா சாறு- 2 ஸ்பூன்
  2. பன்னீர்- 1 ஸ்பூன்

அப்ளை செய்யும் முறை:

ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துள்ள புதினா சாறு மற்றும் பன்னீர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது கலந்து வைத்துள்ள புதினா சாறினை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

1/2 மணி நேரம் கழித்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விடுங்கள். இது மாதிரி நீங்கள் செய்தால் போதும் உங்களுடைய முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து விடும். 

டிப்ஸ்- 2

பருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்

  • கடலை மாவு- 1 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள்- 1/2 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு- 3 சொட்டு

அப்ளை செய்யும் முறை:

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த கிண்ணத்தில் எடுத்துவைத்துள்ள கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு 3 சொட்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

அடுத்து கலந்து வைத்துள்ள அந்த பேஸ்டை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த டிப்ஸை மட்டும் செய்தால் முகத்தில் பருக்கள் இருந்த இடமே தெரியாது.

இதையும் படியுங்கள்⇒ நரைமுடி 2 நிமிடத்தில் மறைய இந்த ஹேர் டையை அப்ளை செய்யுங்கள் போதும்..!

டிப்ஸ்- 3

முகப்பரு போக்க இயற்கை வழிகள்

தேவையான பொருட்கள்:

  1. பாதாம் பருப்பு-
  2. ரோஜா இதழ்- சிறிதளவு 

அப்ளை செய்யும் முறை:

முதலில் ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பினை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஊறிய பிறகு அதனை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து அதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த டிப்ஸினை நீங்கள் ட்ரை செய்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து இருக்கும் ஆச்சரியத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement