வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருகருவென கட்டுக்கடங்காமல் முடி வளர கடுகு ஒன்று போதும்..!

Updated On: October 17, 2024 11:36 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

கருகருவென கட்டுக்கடங்காமல் முடி வளர கடுகு ஒன்று போதும்..! Mustard Oil for Hair Growth in Tamil..!

பொதுவாக பெண்களுக்கு நீளமான முடி வேண்டும், அடர்த்தியான முடி வேண்டும், கருமையாக முடி வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அது பெரும்பாலான பெண்களுக்கு கனவாகவே இருந்துவிடுகிறது. தற்பொழுது உள்ள கால கட்டத்தில் எந்த பெண்களும் இயற்கை முறையில் எந்த பொருளையும் முடிக்கு பயன்படுத்துவதில்லை. ஷாம்பு, ஹேர் ட்ரையர் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தி முடியை கெடுத்துவிடுகிறார்கள். அக்கால பெண்களுக்கு முடி அடர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல் நீளமாகவும் இருந்தது. அது போன்ற முடியை பெறுவதற்கான வழி என்ன என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

கடுகு:கடுகு

அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருளான கடுகு முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த ஒரு பொருள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் கடுகு முடி வளர்ச்சியை சீராக வளர செய்வதில் மிக சிறந்த ஒரு பொருள் ஆகும். இந்த கடுகை தலை முடிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்ப்போம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ரூபாய் செலவில் வீட்டிலே பேசியல் செய்யலாம்.! எப்படி தெரியுமா..?

பயன்படுத்தும் முறை – Mustard Oil for Hair Growth in Tamil:

சமையலுக்கு பயன்படுத்தும் பொருளில் ஒன்றான கடுகை தேவையான அளவு நன்கு பொடி செய்துகொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் ஓரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்த பின்பு கடுகு பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைத்து அவற்றை நன்றாக ஆறவிடவும். தண்ணீர் நன்கு ஆறியதும் அதனுடன்  விளக்கெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் விட்டமின் ஈ மாத்திரையின் ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த தண்ணீரை ஊற்றி தலையில் நன்றாக ஸ்ப்ரே செய்யவும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய செய்து வர வேண்டும். இவ்வாறு தலைக்கு ஸ்ப்ரே செய்யும்பொழுது தலைக்கு லேசாக மசாஜ் செய்யுங்கள், பிறகு Fan காற்றில் காயவைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் ஒரு முடி வளர வேண்டிய இடத்தில் 100 முடி வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 வாரங்களில் வழுக்கை தலையிலும் முடி வளரும் இதை செய்தால் ..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now