அழகான மற்றும் நீளமான நகம் வேண்டுமென்றால் இப்படி பண்ணுங்க

nail valarpathu eppadi in tamil

நகம் அழகாக வளர்ப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! பெண்களுக்கு நகம் வளர்ப்பது பிடிக்கும். ஆனால் அந்த நகத்தை கஷ்டபப்ட்டு வளர்ப்பீர்கள். கொஞ்ச நாளிலே உடைந்துவிடும் அதற்கு என்ன செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம். நகம் அழகாக இருந்தாலே கைகள் அழகாக இருக்கும். சிலருக்கு நகம் வளர்க்க பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. நகம் உடையாமல் நீளமாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ 5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி? இதோ சில சூப்பர் டிப்ஸ்..!

நகங்கள் உடையாமல் இருக்க தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
  • பாதாம் எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
  •  வாசனை எண்ணெய் – சிறிதளவு

ஸ்டேப்:1 

முதலில் பாதாம் எண்ணெயை சூடு செய்யவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை ஊற்றவும். பின் வாசனை எண்ணெய் சிறிதளவு சேர்க்கவும்.

ஸ்டேப்:2

கலந்த எண்ணையை ஒரு வாரத்தில் 3 நாட்கள் இந்த எண்ணையை நகத்தில் தடவி வந்தால் நகம் உடையாது. நகம் அழுத்தமாக இருக்கும்.

நகம் அழகு குறிப்பு:

டிப்ஸ்:1 

தினமும் தூங்குவதற்கு முன் நகங்களில் பாதாம் எண்ணையை தடவி வந்தால் நகம் வளர்ச்சி அடையும்.

டிப்ஸ்:2

நகங்கள் அழுத்தமாக இருந்தால் ஆலிவ் எண்ணையை தடவி வந்தால் soft ஆகிவிடும்.

டிப்ஸ்:3

நகங்களில் சொத்தை இருந்தால் ரோஸ் வாட்டரை அப்ளை செய்யுங்கள். சொத்தை நகம் இல்லாமல் புதிய நகம் வளர ஆரம்பிக்கும்.

டிப்ஸ்:4

நகங்களில் அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதை தவிர்க்கவும். நகங்களை அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்:5

உங்கள் உடல்களில் நீர்சத்து இருந்தால் தான் நகங்கள் வளர்ச்சி அடையும். அதனால் நீர்சத்து உள்ள உணவுகளாக சாப்பிடுங்கள்.

டிப்ஸ்:6

புரத சத்து உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். முட்டை மற்றும் பால் போன்றவை சாப்பிடலாம். அப்போது தான் நகங்கள் நன்கு வளர்ச்சி அடையும்.

டிப்ஸ்:7

நகங்களை வட்ட வடிவில் வளர்க்க வேண்டும். வட்ட வடிவங்களில் வளர்த்தால் தான் உடையாது. நீளமான மற்றும் அழகான நகம் வேண்டுமென்றால் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami