வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. மாதம் 2 முறை போதும் முடி கருப்பாகவே இருக்கும்

Advertisement

வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. Natural Hair Dye at Home in Tamil

Natural Hair Dye at Home in Tamil – இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு சரி, பெரியவர்களுக்கும் சரி இருக்கும் பொதுவான பிரச்சனை எதுவென்றால் நரைமுடி பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை பயன்படுத்துவதற்கு பதில். வீட்டிலேயே இயற்கையான முறையில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி ஹேர் டை தயாரித்து தலைக்கு பயன்படுத்துங்கள். உங்களுக்கு இயற்கையான முறையில் ஹேர் டை செய்ய தெரியாது என்றால். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவிடும் வகையில் நமது பொதுநலம்.காம் வலைப்பதிவில் நிறைய வகையான ஹேர் டை செய்முறை விளக்கத்தை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் ஒரு அருமையான ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் – 4 ஸ்பூன்
  2. அவுரி பவுடர் – 8 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
  4. Eucalyptus Oil 4 சொட்டுகள்
  5. தண்ணீர் – தேவையான அளவு
  6. இரும்பு வாணலி – ஒன்று

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும் .!

ஹேர் டை செய்முறை விளக்கம் – White Hair to Black Hair Naturally in Tamil:Natural Hair Dye

ஸ்டேப்: 1

ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நான்கு ஸ்பூன் மருதாணி பவுடர் மற்றும் அவுரி பவுடர் இரண்டையும் சேர்க்கவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி போஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

இப்பொழுது அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் Eucalyptus Oil நான்கு சொட்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 4

பிறகு தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருந்து பிறகு எப்பொழுதும் போல தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கவும்.

ஸ்டேப்: 5

இந்த முறையை மாதத்திற்கு இரண்டு முறை என்று தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தால் நல்ல ரிசல்ட்டை பெறலாம்.

இதையும் க்ளிக் செய்து படியுங்கள் 👇
இளநரை பிரச்சனையா? இளநரைக்கு உடனடி தீர்வு!!!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement