சருமம் பளபளக்க ஃபேஸ் பேக் – Night Face Packs in Tamil
பொதுவாக நமது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நமது முகத்தில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைகிறது. இதன் காரணமாக நமது சருமத்தில் சிறிய மெல்லிய கோடுகள், கரும்புள்ளிகள், கருத்திட்டுகள், சரும வறட்சி போன்ற பலவிதமான சரும பிரச்சனைகள் உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும். இதற்கு தங்களுக்கு போதுமான அளவு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் இரவு நேரத்திலாவது சருமத்திற்கு ஏதாவது ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளுங்கள். இயற்கையான முறையில் தங்கள் சரும அழகை பாதுகாக்க இங்கு குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸில் ஏதேனும் ஒன்றை பாலோ பண்ணுங்க பிரண்ட்ஸ் தங்கள் முகம் மின்னல் போன்ற பளிச்சென்று ஜொலிஜொலிக்கும். சரி வாங்க இரவு நேரத்தில் போடக்கூடிய Face Packs சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
சருமம் பொலிவு பெற அழகு குறிப்புகள்
மஞ்சள் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
- தண்ணீர் – சிறிதளவு
செய்முறை:
Night Face Packs in Tamil – ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நனறாக மிக்ஸ் பண்ணிக்கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இதனை இரவு உறங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து ரூ 10 – 15 நிமிடங்கள் வைத்திருக்கவும் பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இவ்வாறு தினமும் செய்து வர முகம் பளிச்சென்று இருக்கும்.
தயிர் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- தயிர் – இரண்டு ஸ்பூன்
- ரோஸ் பவுடர் – ஒரு ஸ்பூன்
- தேன் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ரோஸ் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றை முகத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ளுங்கள். பின் 15 நிமிடங்கள் காத்திருந்த முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவுடன் காணப்படும்.
பச்சை பருப்பு ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- பச்சை பயிர் – 50 கிராம்
- தயிர் – மூன்று ஸ்பூன்
செய்முறை:
பச்சை பயிரை மிக்ஷியில் சேர்த்து பவுடராக அரைத்துக்கொள்ளுங்கள். பின் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் அரைத்த பச்சை பயிர் பவுடரை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அதனுடன் 2 அல்லது 3 ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பளபளப்பாக காணப்படும்.
தேங்காய் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு சுத்தமான கடாயில் துருவிய தேங்காவை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின் வதக்கிய தேங்காவை ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் வரை காத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும வறட்சி நீங்கும்.
முகம் பொலிவு பெற இயற்கை அழகு குறிப்புகள் |
தேன் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
- தேன் – இரண்டு ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
Night Face Packs in Tamil – ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை காத்திருங்கள் பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமம் தங்கம் போல் ஜொலிஜொலிக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தினமும் ட்ரை செய்து வந்தாலே போதும் சருமம் மென்மையாக, பளபளப்புடன் இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |