ஆயில் ஸ்கின் டிப்ஸ் | Face Brightness Tips in Tamil
வணக்கம் நண்பர்களே… இன்று பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் முகத்தில் எண்ணெய் வழிவது (Oily Skin Tips Tamil) அதனால் முகத்தில் கரும்புள்ளிகள் வருவது போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் அதிக அளவு ஒரே மாதிரியான தவறுகளை எல்லாரும் செய்கிறீர்கள். மருந்துக்கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி முகத்தில் பூசுவதால் பல பிரச்சனை வருகிறது. சிலருக்கு பரம்பரையாக இந்த பிரச்சனை இருக்கும். இனி கவலை வேண்டாம் உடலுக்கு ஆரோக்கியமான பியூட்டி டிப்ஸ்சை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- முட்டையின் வெள்ளைக்கரு
- எலுமிச்சை சாறு
- ஓட்ஸ்
- தேன்
- கற்றாழை
- புதினா இலை
- ரோஸ் வாட்டர்
- வெள்ளரிக்காய்
- ஐஸ் கட்டி
- வேப்பிலை சாறு
- தக்காளி சாறு
முகத்தில் எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் -1
முட்டை | எலுமிச்சை
- ஒரு சின்ன கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளவும். அதனை நன்கு கலக்கவும். பின் அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பின் முகத்தில் தடவவும்.
- ஒரு 10 நிமிடம் முகத்தில் ஊற வைக்கவும். பின் முகத்தை கழுவவும். எலுமிச்சையில் அசிடிக் அமிலம் இருப்பதால் முகத்தில் வரும் எண்ணெய் பசையை தடுக்கும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் -2:
ஓட்ஸ்
- ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும். பின் முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் மெருதுவாக தடவவும்.
- இந்த டிப்ஸை வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். அது மட்டும் இல்லாமல் ஓட்ஸ் எல்லா வகையான முகப் பிரச்சனைக்கும் நன்றான தீர்வு தரும்.
எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் -3
கற்றாழை
- கற்றாழை ஜெல் எடுத்து இரவு முகத்தில் தடவவும், மறுநாள் காலையில் முகத்தை கழுவவும்.
- கற்றாழை ஜெல் எண்ணெய் வழியும் முகத்திற்கு நன்றான தீர்வு கொடுக்கும்.
முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் – 4:
புதினா இலை
- புதினா இலையை அரைத்து தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணெய் வழிவதை தடுக்கலாம்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் -5:
ரோஸ் வாட்டர்
- ரோஸ் வாட்டர் என்பது ரோஸ் இதழ்களில் செய்யக்கூடிய தண்ணீர்தான். இதனை தாராளமாக முகத்தில் தடவலாம்.
- தினமும் முகத்தில் தடவி வந்தால் அதிகப்படியான எண்ணையும், அழுக்குகளும் நீங்கி முகம் பொலிவு தரும்.
நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை |
எண்ணெய் பசை நீங்க டிப்ஸ்- 6:
எலுமிச்சை சாறு
- எலுமிச்சை சாறு அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நேரடியாக முகத்தில் தடவவும்.
- பின்பு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் கழுவவும். எண்ணெய் வழியும் முகத்திற்கு மிகவும் நல்லது.
முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க டிப்ஸ் -7:
வெள்ளரிக்காய்
- வெள்ளரிக்காய்யை அரைத்து அதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் பசை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க டிப்ஸ்- 8:
ஐஸ் கட்டி
- ஐஸ் கட்டியை எடுத்து காட்டன் துணியில் வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யவும். இதனால் முகம் வாடாமல் குழந்தை சருமம் போல் இருக்கும்.
SPL ஃபேஷியல் டிப்ஸ் |
ஆயில் ஸ்கின் டிப்ஸ் -9:
வேப்பிலை சாறு
- வேப்பிலையை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- பின் முகத்தில் இருக்கும் கிருமிகள் நீங்கி எண்ணெய் வழியாமலும் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கவும் வழி செய்கிறது.
எண்ணெய் பசை குறைய டிப்ஸ்-10:
தக்காளி சாறு
- தக்காளியை எடுத்து அரைத்து அந்த சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் வழியாமலும் முகம் மிருதுவாக இருக்கும்.
- மேலே கொடுக்கப்பட்ட டிப்ஸ் அனைத்தும் பெண்கள், ஆண்கள் என இருவரும் செய்துகொள்ளலாம். இதில் எந்த விதமாக பக்க விளைவுகளும் வராது.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |