பொடுகு பிரச்சனை அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரே மாதத்தில் பொடுகு தொல்லை அடியோடு நீங்கிவிடும்..!

Advertisement

Remove Dandruff Permanently At Home

இந்த காலகட்டத்தில் பொடுகு பிரச்சனை அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். ஆண் மற்றும் பெண் என்று இருவருக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது. இந்த பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் நாளடைவில் முடி அதிகமாக கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இந்த பொடுகு பிரச்சனையை நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வேப்பிலை எடுத்து கொள்ளவும்:

வேப்பிலை எடுத்து கொள்ளவும்

முதலில் உங்கள் முடிக்கு தேவையான அளவு வேப்பிலையை எடுத்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலையை போட்டு 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

வேப்பிலையின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும்.

பின் அந்த நீரை வடிகட்டி உங்கள் தலை முடியில் மட்டும் ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி அலசி கொள்ள வேண்டும். பின் தலையை 20 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் அலசி கொள்ள வேண்டும்.

 இதுபோல வேப்பிலை நீரால் அலசுவதால் உங்கள் தலையின் அடியில் படிந்திருக்கும் பொடுகு முடியின் நுனிக்கு வந்துவிடும்.  
பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..!

Remove Dandruff Permanently At Home in Tamil:

வெந்தயம் மற்றும் தயிர்

  • வெந்தயம் – முடிக்கு தேவையான அளவு
  • தயிர் – 1/4 கப்

நீங்கள் தலை குளிப்பதற்கு 1 நாளுக்கு முன்னரே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஊறவைத்து கொள்ள வேண்டும். வெந்தயம் ஊறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கிண்ணத்தில் கால் கப் தயிர் அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

உங்களின் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர இதை ட்ரை பண்ணுங்க..!

முடிக்கு அப்ளை செய்யும் முறை: 

முடிக்கு அப்ளை செய்யும் முறை

இந்த பேஸ்ட் தலைக்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முடி சிக்கு இல்லாமல் இருக்க வேண்டும். பின் இந்த பேஸ்டை உங்கள் தலை முடியின் வேர் பகுதியில் இருந்து அடி முடி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட் தலையில் 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 30 நிமிடம் கழித்து உங்கள் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசிக் கொள்ளலாம்.

இதுபோல வாரத்திற்கு 1 முறை என்று 1 மாதம் செய்து வந்தால் உங்கள் தலையில் இருக்கும் பொடுகு அடியோடு நீங்கிவிடும். இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே..!

இதையும் படித்துபாருங்கள்=> நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement