உப்பு அழகு குறிப்பு | Salt Beauty Tips in Tamil
பொதுவா நமது சரும அழகை அதிகரிக்க பலவகையான கிரீம், ஆயில், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் இது போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அவையெல்லாம் முழுமையான பலன்களை தருப்பதில்லை.. நமது சரும அழகை அதிகரிக்க நமது வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு பியூட்டி பார்லர் என்று சொல்லலாம். நமது வீட்டில் உள்ள சமையலறையில் பல்வகையான் பொருட்கள் இருக்கும் அதில் சில பொருட்கள் நமது சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது. அவற்றில் ஒன்று தான் உப்பு. உப்பு சருமத்தை பிரைட்டாக வைப்பதற்கும், சரும நிறத்தை அதிகரிக்கவும் மிகவும் பயன்படுகிறது. சரி வாங்க இன்று நாம் உப்பை பயன்படுத்தி சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.
உப்பில் உள்ள சத்துக்கள்:
உப்பில்லா சாப்பாடு குப்பைக்கு என்று ஒரு பழமொழி இருக்கிறது. உப்பில் அயோடின், ஆன்ட்டிபயாட்டிக், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் உள்ளது. ஆக உப்பை முகத்தில் பயன்படுத்துவதினால் எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாது.. இருந்தாலும் உப்பை நேரடியாக முகத்தில் அப்ளை செய்வது தான் தவறு அதனுடன் சில பொருட்களை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் முழுமையான பலன்களை பெற முடியும்.
முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்க:
நமது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உப்பு மிகவும் பயன்படும் ஒரு பொருளாக உள்ளது. ஒரு ஸ்பூன் தேனில் 1/2 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உப்பு நன்கு கரைந்தவுடன் முகத்தில் அப்ளை செய்து நமக்கு வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த டிப்ஸை வாரத்தில் ஒரு முறை செய்தாலே போதும் முகம் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
முகம் பிரைட்டாக இருக்க மற்றும் சரும நிறம் அதிகரிக்க:
சிறிதளவு ரோஸ் வாட்டருடன், சிறிதளவு கல் உப்பு செய்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு முகத்தை நன்றாக வாஷ் செய்தபிறகு இந்த உப்பு கலந்த ரோஸ் வாட்டரால் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால்.. முகம் தினமும் பிரைட்டாக பளிச்சென்று இருக்கும்.
ரோஸ் வாட்டர் இல்லை இல்லை என்றால் சாதாரண தண்ணீரில் கலந்து முகத்தை வாஷ் செய்யலாம் இப்படி செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள், புண்ணால் ஏற்பட்ட தழும்புகள், கருவளையம் இது போன்ற பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்கள்…!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |