வீட்டில் இருந்தே முக அழகை அதிகரிக்க இயற்கை டிப்ஸ்கள்..! Beauty Tips In Tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முக அழகை அதிகரிக்க வீட்டில் இருந்தே இயற்கையான முறையில்(Skin Whitening Home Remedies) எப்படி அழகை மேம்படுத்தலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். சில பெண்கள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். சில கருப்பாக இருக்கும் பெண்கள் நாமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கருமையாக உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். இதோ உங்களுக்காகவே முக அழகை மேலும் அழகுபடுத்த இயற்கை அழகு குறிப்புகள்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! |
முகம் வெள்ளையாக மாற:
தேவையான பொருட்கள்:
- முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
- வேப்பிலை பொடி – 1 ஸ்பூன்
- துளசி பொடி – 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – சிறிதளவு
செய்முறை விளக்கம் 1:
முதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் 1 ஸ்பூன் வேப்பிலை பொடியை சேர்க்கவும்.
செய்முறை விளக்கம் 2:
அடுத்து இதனுடன் துளசி பொடியை 1 ஸ்பூன் எடுத்து சேர்த்து கொள்ளவும். துளசி பொடியானது அனைத்து நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்க கூடிய ஒன்றாகும்.
செய்முறை விளக்கம் 3:
இந்த 3 பவுடரையும் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்ய ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அவ்ளோதாங்க இந்த முக அழகை அதிகரிக்க பேஸ்ட் ரெடி. இந்த பேஸ்டை முகத்தில் தடவும் முன் சாதரணமாக முகத்தை கழுவி கொள்ளவும்.
முகத்தை கழுவிய பின் ஈரம் இல்லாத அளவுக்கு வைத்த பின்னர் இந்த பேஸ்டை முகத்தில் தடவ வேண்டும்.
இந்த பேஸ்டை முகத்தில் 10 நிமிடம் தடவி காயவைக்க வேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்து முகத்தை நீரால் கழுவி கொள்ளலாம்.
இந்த பேஸ் பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை தடவி வந்தால் கண்டிப்பாக முகம் வெள்ளையாக மாறும் ட்ரை பண்ணி பாருங்க.
முகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..! Whitening Face Tips In Tamil..! |
குறிப்பு 1:
முல்தானி மிட்டி: நமது தோலில் இருக்கும் தேவையில்லாத எண்ணெய் சுரப்பிகளை தடுக்கும் வல்லமை வாய்ந்தது. அதுமட்டும் இல்லாமல் தோலில் இருக்கும் அசுத்தங்களையும் சுத்தம் செய்யும் தன்மை பெற்றது முல்தானி மிட்டி.
குறிப்பு 2:
வேப்பிலை பொடி: வேம்பு இலையில் அதிகமான கிருமி நாசினி தன்மை நிறைந்துள்ளது. இதை அழகிற்கும், மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டில் வேப்பிலையை அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும்போது வேப்பிலை பொடியை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பு 3:
துளசி பொடி: துளசி பொடி அனைத்து நாட்டு மருத்துவ கடைகளிலும் தாராளமாய் கிடைக்கும். கடைகளில் துளசி பொடி கிடைக்கவில்லை என்றால் இப்போது அனைவரின் வீட்டிலும் கூட துளசி செடி வளர்த்து வருகின்றனர்.
துளசியானது நமது சருமம், தோல்களில் உள்ள கறைகளை நீக்கி வெண்மையாக வைத்திருக்கும்.
வீட்டில் இருக்கும் துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காயவைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
குறிப்பு 4:
ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர் எப்போதும் நமது தோல்களை ஃப்ரெஷாக வைத்திருக்க உதவும்.
முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000 |