30 நாட்களில் இடுப்பிற்கு கீழ் வரை முடி நீளமாக வளர பாசிப் பயிறு மட்டும் போதும்…!

Advertisement

Thalai Mudi Neelamaga Valara  

பொதுவாக பெண்களுக்கு இருக்கும் அழகினை மேலும் அதிகரித்து காண்பிப்பது எது வென்றால் அது முக அழகும், முடி அழகும் தான். இந்த இரண்டினையும் எப்போதும் சிறப்பாக வைக்க வேண்டும் என்று பெண்கள் பார்லருக்கு சென்று அழகுப்படுத்தி கொள்வார்கள். என்ன தான் நாம் பார்லருக்கு சென்று காசு செலவு செய்து முடிக்கு ஹேர் பேக் மற்றும் ஹேர் ஆயில் அப்ளை செய்தாலும் கூட அவை அனைத்தும் நீண்ட நாட்களுக்கு பயன் அளிப்பது இல்லை. இதற்கு மாறாக இன்னும் சில நபர்கள் முடியினை சரியாக பராமரிப்பதே இல்லை. இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்றைய பதிவானது மிகவும் பயனிளிக்க கூடியதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் 30 நாட்களில் பாசி பயிரினை வைத்து இடுப்பிற்கு கீழ் முடியினை நீளமாக வளர செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

முடி நீளமாக வளர்வது எப்படி.?

pasi payaru hair pack

இயற்கையான முறையில் முடியினை நீளமாக வளர செய்வதற்கு பாசிப்பயிறுடன் சில பொருட்களை சேர்த்து ஹேர் பேக் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பயிறு- 1 கப் 
  2. முட்டை- 2
  3. தயிர்- 3 ஸ்பூன் 

இதையும் படியுங்கள்⇒ வெறும் 5 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் அழுக்கினை வெளியேற்றி முகத்தை பளிச்சென்று வைக்க இது மட்டும் போதும்.. 

Algae Crop Hair Pack Homemade:

ஸ்டேப்- 1

பாசி பயிறு உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு மட்டும் இல்லாமல் முடியின் வளர்ச்சிக்கும் இயற்கையான முறையில் உதவக்கூடிய ஒன்றாக உள்ளது.

ஆகையால் 1 கப் பாசி பயிரினை முதல் நாள் இரவே எடுத்துக்கொண்டு ஒரு ஈரமான துணியில் வைத்து காற்று புகாத அளவிற்கு வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பார்த்தால் முளை கட்டிய பாசி பயிறு தயார் ஆகிவிடும்.

ஸ்டேப்- 2

இப்போது ஒரு மிக்சி ஜாரில் முளை கட்டி வைத்துள்ள பாசி பயிரினை சேர்த்து அதனுடன் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். தயிரை நாம் எதனால் எடுத்துக்கொள்கிறோம் என்றால் முடியின் வறட்சி மற்றும் பொடுகினை போக்கி முடியினை சைனிங்காக இருக்க செய்யும்.

ஸ்டேப்- 3

அடுத்து மிக்சி உள்ள பொருட்கள் நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதனை ஒரு பவுலில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு 2 முட்டையினை எடுத்துக்கொண்டு அதன் உள்ளே இருக்கும் வெள்ளை கருவினை மட்டும் பவுலில் அரைத்து வைத்துள்ள பேஸ்டுடன் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இயற்கையான முறையில் தயார் செய்த பாசி பயிறு ஹேர் பேக் தயார்.

பயன்படுத்து முறை:

 முடி நீளமாக வளர்வது எப்படி

தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை அப்ளை செய்வதற்கு முன்பாக வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை தடவி கொள்ளுங்கள்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரம் 1 முறை என அப்ளை செய்தால் போதும் 30 நாட்களில் உங்களுடைய முடியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement