தோல் வெண்மைக்கு வைட்டமின் சி சோப்..! Vitamin C Soap For Skin Whitening..!
mugam vellaiyaga soap: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.com பதிவில் இயற்கையான முறையில் உடல் முழுவதும் வெள்ளையாக மாற்ற வைட்டமின் சி சோப்(vellaiyaga soap) வீட்டிலே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பெண்கள் அனைவரும் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த சோப்களை பயன்படுத்துவதால் சருமத்தில் எதிர்பார்க்காத பிரச்சனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தி இயற்கையாக சோப் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
![]() |
வைட்டமின் சி சோப்(vellaiyaga soap) தயாரிப்பது எப்படி:
தேவையான பொருட்கள்:
- கிளியர் சோப் பேஸ் – 60 கிராம்( சிறிய துண்டுகளாக நறுக்கியது)
- ஆரஞ்ச் பீல் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 கப்
- ஆரஞ்ச் எஸ்ஸென்சியல் ஆயில் – தேவையான அளவு
- ஆரஞ்ச் எக்ஸ்ட்ராட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
Step 1:
முதலில் ஒரு பவுலில் ஆரஞ்ச் பீல் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளவும். ஆரஞ்ச் பீலுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொள்ளவும்.
Step 2:
அடுத்து இதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்ததாக கிளியர் சோப் பேஸ் 60 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
அடுத்து கடாயில் சிறிதளவு தண்ணீர் வைத்து அதனுள் நறுக்கி வைத்த கிளியர் சோப் பேஸ்ஸை கொதிக்க வைக்கவேண்டும்.
![]() |
Step 3:
நன்றாக கொதித்த உடனே ஆரஞ்ச் எக்ஸ்ட்ராட்ஸ் 2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்ச் எஸ்ஸென்சியல் ஆயில் தேவையான அளவு சேர்க்க வேண்டும்.
அடுத்து உங்களுக்கு சோப் எந்த வடிவில் தேவைப்படுகிறதோ அச்சு கலவையை அந்த மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும்.
Step 4:
இந்த கலவையை உங்களுக்கு பிடித்த அச்சுகளில் ஸ்பூனால் எடுத்து ஊற்றி 1 மணி நேரம் வைக்க வேண்டும். அவ்ளோதாங்க சோப் ரெடி.
குறிப்பு:
இந்த இயற்கை ஆரஞ்ச் எண்ணெய் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கும். இந்த சோப் நம்ம சருமத்தை எப்போதும் மென்மையாகவும், சருமத்தில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் ஆரோக்கியமாக நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்ச் பீல்களில் அதிகமான வைட்டமின் சி சத்துகள் நிறைந்திருப்பதால் சருமம் எப்போதும் ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கும்.
இந்த சோப்பை கண்டிப்பா வீட்டுல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க. உங்க சருமத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
![]() |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |