ஹர் டையை தூக்கி போடுங்க.! இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் 100% ரிசல்ட்

white hair to black hair naturally permanently in tamil

வெள்ளை முடி கருப்பாக

இன்றைய காலத்தில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி தலையில் அப்ளை செய்கின்றோம். கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட் வந்தாலும்  உங்களது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் ஹேர் டை தயாரித்து வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் படித்த தெரிந்து கொள்வோம்.

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி இலை –2 கைப்பிடி
  2. டீத்தூள் – 2 தேக்கரண்டி 

வெள்ளை முடி கருமையாக:

வெள்ளை முடி கருமையாக

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள்.  அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்றாக சாயம் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்பு டீயை வடிகட்டி கொள்ளுங்கள்.

செம்பருத்தி இலை 2 கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள். இதை மிக்சியில் சேர்த்து தண்ணீருக்கு பதிலாக வடிக்கட்டி வைத்த டீயை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒  வெள்ளையாக இருக்கும் முடியில் இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க.. மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள்

அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்த செம்பருத்தி, வடிக்கட்டி வைத்த டீயை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

இந்த பேஸ்ட் நன்றாக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இதனோடு சிறிதளவு டீ தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் இந்த பேக் அப்படியே ஊறட்டும்.

மறுநாள் காலையில் இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து டீ தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

வெள்ளை முடி கருமையாக

இந்த செம்பருத்தி பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். 30 நிமிடம் தலையில் அப்படியே ஊறட்டும். பிறகு இந்த பேக்கை பயன்படுத்தியதும் ஷாம்பு பயன்படுத்தி தலை தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் செம்பருத்தி பேக் தலையில் அழுக்குகளை நீக்கி முடியை பளபளக்க செய்யும் தன்மை உடையது. 

இதையும் படியுங்கள்⇒ வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil