பனிக்காலத்தில் ஏற்ற தேங்காய் எண்ணெய்..! முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இல்லையென்று கவலைப்பட வேண்டாம்..!

Advertisement

தலை முடி அடர்த்தியாக வளர | Winter Season Hair Oil in Tamil

பனிக்காலத்தில் முகத்தின் அழகை பனிபத்து வந்து கெடுத்துவிடும். அதேபோல் தான். தலை முடியும், தேவையில்லாமல் கொத்து கொத்தாக முடி கொட்டும். இதற்கு நிறைய சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டாலும் தலை முடி கொட்டிக்கொண்டு தான் இருக்கும். இதனை சரி செய்ய பனிக்காலத்திற்கு ஏற்ற ஹேர் ஆயில் தான் இது.

இதை வாரத்திற்கு ஒரு இரண்டு முறை தடவி குளித்துவதால் முடி கொட்டுவதை தவிர்க்க முடியும்..!

Winter Season Hair Oil in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  1. ஆளிவிதை – 100 கிராம்
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி
  3. செம்பருத்தி இலை – 10
  4. செம்பருத்தி பூ – 4
  5. பசும்பால் – தேவையான அளவு

இதையும் ட்ரை பண்ணுங்க ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்..! ஆண் பெண் இருவரும் ட்ரை பண்ணலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

ஸ்டேப்: 1

முதலில் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும், அதில் எடுத்துவைத்துள்ள ஆளிவிதை, கருவேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, இதனை அரைக்க தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 winter season hair oil in tamil

அரைத்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். வெயில் இருக்கும் இடத்தில் ஒரு துணியை விரித்து அதில் நைசாக தட்டை போல் ஒரு வட்ட வடிவில் தட்டிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அதனை ஒரு நாள் முழுவதும் அப்படியே வெயிலில் போட்டு காயவிடவும்.

ஸ்டேப்: 4

 winter season hair oil in tamil

மறுநாள் காலையில் எடுத்தால் வடகம் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

ஸ்டேப்: 5

ஒரு கடாயில் 300 ML தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனை அடுப்பில் வைத்து நாம் செய்துவைத்துள்ள 7 வடகத்தை அதில் சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பை மிதமான தீயில் இருக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

 winter season hair oil in tamil

ஓரளவு எண்ணெய் சூடானதும், தேங்காய் எண்ணெய் நிறம் மாறி நல்லெண்ணெய்  போல் மாறிவிடும் அதனை எடுத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: 

இதனை வாரத்திற்கு 2 தடவை யூஸ் செய்யலாம் எப்போது தலை குளிப்பீர்களோ அப்போது இந்த எண்ணெய் தடவி 1 மணி நேரம் மசாஜ் செய்து தலை குளித்து வந்தால் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் கருமையாகவும் வளரும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement