தரித்திரம் நிறைந்த கடன் ஒழிய உப்பு பரிகாரம்..! நீங்களே செய்யலாம்..!

Kal Uppu Pariharam

கடன் தொல்லை நீங்க – Kal Uppu Pariharam

பொதுவாக பலருக்கு தீராத கடன் பிரச்சனை இருக்கும். மாதம் மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பாதி கடனுக்கே செலவிடுகிறோம். எப்படி சமாளிப்பது என்று பலரும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். கடன் தொல்லை நீங்க கல்லுப்பு பரிகாரம் மிகசிறந்த ஒன்றாகும். கஷ்டங்களை கொடுக்கும் கடனை கூட மிக எளிதாக கரிக்கக்கூடிய ஆற்றல் கல் உப்பிற்கு உள்ளது. சரி வாங்க அந்த பரிகாரம் எப்படி செய்தால் முழுமையான பலன்களை பெற முடியும் என்பதை பற்றி முழுமையாக இப்பதிவை படித்து சேர்ந்து கொள்வோம்.

கடன் தொல்லை நீங்க – கல் உப்பு பரிகாரம்: 1 

ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும்.

கடன் தொல்லை நீங்க – கல் உப்பு பரிகாரம்: 2

செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

ஒரு வெற்றிலையை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் கடன் தீர வேண்டும் என்று எழுத வேண்டும். அதாவது நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடன் உங்களுக்கு இருக்கும் அதை நீங்கள் யாரிட ம்வாங்கினீர்களோ அவர்களுடைய பெயரை எழுதி அவரிடம் வாங்கிய கடன் தீர வேண்டும் என்று அந்த வெற்றிலையில் பேனாவில் சிறிய அளவில் எழுதிக் கொள்ளுங்கள். வெற்றிலை கிழியாத அளவிற்கு லேசாக எழுதிக் கொள்ளுங்கள்.

இப்படி எழுதிய வெற்றிலையின் மேல் ஒரு ஸ்பூன் கல்லுப்பை வைத்து அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். உப்பு கீழே கொட்டாமல் இருக்க வேண்டும்.

வேண்டுமென்றால் அடியில் இன்னொரு வெற்றிலையைக் கூட வைத்துக் கட்டி இந்த பொட்டலத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

பின் மறுவாரம் வரும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு வெற்றிலைக்கு உள்ளே இருக்கும் கல் உப்பை தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும்.

பின் அந்த காய்ந்து போன வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மீண்டும் இதே போல ஒரு வெற்றிலை கல்லுப்பு பொட்டலத்தை கட்டி வைக்க வேண்டும். இதே போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் தெரியும்.

குறிப்பு: இந்த கல்லுப்பு பரிகாரத்தை செவ்வாய் கிழமை காலையில் வரக்கூடிய செவ்வாய் ஓரையில் தான் செய்ய வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பரிகாரத்தை செய்துவிட வேண்டும்.

கடன் தொல்லை நீங்க பரிகாரம்: 3

அனுஷம் நட்சத்திரமும் விருச்சக லக்னமும் கூடிய காலத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடன் தொகையில் ஒரு சிறு தொகையைக் கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருப்பினும் அக்கடன் முழுவதும் விரைவில் தீர்ந்துவிடும். வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம்.

2022-ஆம் ஆண்டிற்கான மைத்ர முகூர்த்தம் தேதி மற்றும் நேரத்தை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம் 2022

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்