குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்

Advertisement

கிருஷ்ண ஜெயந்தி விரதம் | கோகுலாஷ்டமி வழிபாடு முறை

நண்பர்களே வணக்கம். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். பொதுவாக இந்த அமாவாசை,பவுர்ணமி, ஆடி வெள்ளி ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பீர்கள். அது போல் நிறைய விரத தினங்களில் விரதம் இருப்பீர்கள். அதற்கான பலன்கள் கிடைக்கும் என்று உங்களுக்களுக்கான நம்பிக்கையாக இருக்கிறது. விரதம் இருந்து அதற்கான பலன்களை அடைந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் விரதம் இருப்பது எவ்வளவு பலன்களை தரும் என்று. அதே போல் கிருஷ்ண ஜெயந்தி அன்று  என்ன பலன்கள் கிடைக்கும் அதே போல் என்ன நேரத்தில் விரதம் இருக்கவேண்டும். எப்படி கிருஷ்ணனை வழிபாடு செய்யவேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

கோகுலாஷ்டமி வழிபாடு முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாக இருக்கும். அன்று இருவரும் விரதம் இருந்தால் அந்த கிருஷ்ண பராமத்தமா குழந்தையாக உங்களுக்கு பிறப்பார் என்று ஆன்மீகத்தில் நம்பிக்கையாக உள்ளது.

இந்த விரதத்தை இருவரும் செய்யவேண்டும் என்று கேட்டால் இருவரும் செய்தால் சீக்கிரம் நல்ல பலன்கள் கிடைக்கும். முடியாது என்றால் ஒருவர் மட்டும் விரதம் மேற்கொண்டால் போதுமானது. கிருஷ்ணனை நினைத்து நீயே எங்களுக்கு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று காலையில் குளித்துவிட்டு வந்து மனதில் நினைத்து விரதத்தை தொடங்கலாம். விரதமானது உங்களின் ஆரோக்கியத்தை பொறுத்து அமைகிறது.

அதே போல் கிருஸ்ண ஜெயந்தி அன்று மற்றவர்களும் விரதமாக இருக்க வேண்டாம் அப்படி கிருஷ்ணனுக்கு விரதம் இருக்கவேண்டும் என்றால் அன்று அசைவம் சாப்பிடாமல் சைவ உணவாக சாப்பிட்டு வாருங்கள் அதுவே கிருஷ்ணனுக்கு செய்யும் பூஜை என்று அவர் எடுத்துக்கொள்வார்.

கிருஷ்ணனை வழிபட அவருடைய படத்தில் பூ வைத்து அவரை மனதில் நினைத்து காலையில் அவருடைய பாதத்தை வீட்டின் வாசல் முதல் பூஜையை அறை வரை வரைந்து. காலையில் வரைய முடியவில்லை பூஜை செய்யும் சிறிது நேரத்திற்கு முன் வரைந்துகொண்டால் போதும்.

பூஜைக்கு என்ன வைத்து பூஜை செய்யவேண்டும் என்றால் அரிசியால் செய்யப்பட்ட எந்த பலகாரத்தை வேண்டுமானாலும் வைக்கலாம். அதே போல் நெய்வேத்தியம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் இந்த ஐந்தில் எது வேண்டுமாலும் வைக்கலாம் அனைத்தையும் வைக்க முடியவில்லை என்றால் வெண்ணெய் மட்டுமானது வைப்பது நல்லது கிருஷ்ணனுக்கு மிகவும் சிறப்பு கொண்டது வெண்ணெய் தான்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement