சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

solar eclipse with pregnancy

சூரிய கிரகணம் கர்ப்பிணிகள் வெளியே செல்லலாமா?

பொதுவாக கிரகணம் என்றாலே, இயல்பாக அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் வந்துவிடுகிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். அதிலும் சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணிகள் வெளியே செல்ல கூடாது என்றும் கூறுகின்றன. அது ஏன் எதற்காக என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சூரிய கிரகணம் 

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

1. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் சூரிய கிரகணத்தின் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2. இந்த நேரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதையும் கிரகணத்தை எந்த வகையிலும் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

3. மேலும் கர்ப்பிணி பெண்கள் தையல், எம்பிராய்டரி, வெட்டுதல், மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

4. சூரிய கிரகணத்தின் போது அவர்கள் கத்திகளையும் ஊசிகளையும் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால் இதைச் செய்வதன் மூலம், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் உறுப்புகளுக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

டிசம்பர் 4 சூரிய கிரகணத்தை எங்கு, எப்படி காணலாம் தெரியுமா?

 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com