நீங்கள் பிறந்த நேரம் இதுவா அப்படினா நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!

What does your Birth Time say about you in tamil

பிறந்த நேரம் பலன்கள்

நண்பர்களே வணக்கம் ஓர் உயிர் நம் மண்ணை வந்து சேர்க்கிறது என்றால் அது அனைவருக்குமே இனிமையான செய்தியாக இருக்கும் அதேபோல் அந்த பிள்ளையின் தாய் தந்தைக்கு பெரிய விழாவாக இருக்கும். இன்னொரு பக்கம் அந்த குழந்தை எத்தனை மணிக்கு பிறக்கிறது என்று குறித்து வைப்பார்கள் அதேபோல் அந்த குழந்தை பிறந்த நட்சத்திரம் போன்றவைகளை குறித்து வைப்பார்கள்.

அது எதற்காக என்றால் 1 வயதிற்கு பின் குழந்தைக்கு ஜாதகம் எழுதுவார்கள். அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து தான் ஜாதகத்தில் எத்தனையாவது இடத்தில் சூரிய பகவான் அமர்வார் என்பதை குறிக்க முடியும். அதனால் தான் குழந்தை பிறக்கும் நேரத்தை குறித்து வைப்பார்கள்.

வாங்க நீங்கள் பிறந்த நேரம் பொறுத்து உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

பிறந்த நேரம் பலன்கள்:

இப்போது முதல் பார்க்க போவது என்னவென்றால் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் யார் பிறந்து இருக்கீர்களோ என்றால் உங்கள் ஜாதகத்தில் சூரியன் 1 கட்டத்தில் இருப்பார் அதனால் உங்கள் வாழ்க்கை மிகவும் ஆரயோக்கியமாக இருக்கும். அதிக நம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். அதேபோல் நீங்கள் எடுத்த விஷயத்திலும் மிகவும் உறுதி படைத்தவராக இருப்பீர்கள். உங்கள் எதிர்காலமும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

காலை 6 மணி முதல் 8 மணிக்குள் நீங்கள் பிறந்தீர்கள் என்றால் சூரியன் 12-ஆம் கட்டத்தில் இருப்பார். அவ்வாறு இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மர்மம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும், அதேபோல் உங்கள் வாழ்க்கையை சிலவகையான கட்டத்திற்குள் வைத்துகொள்வது உங்களுடைய சாமர்த்திய திறமையில் தான் உள்ளது.

நீங்கள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பிறந்திருந்தால் சூரியன் 11 ஆவது இடத்தில் இருப்பார் அவ்வாறு இருப்பதால் நல்ல நண்பர்களுடன் தொடர்பும், சமூகம் தொடர்பான விஷயம் செய்வீர்கள் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு பண தேவை அதிகமாகி இருக்கும், அதேபோல் நீங்கள் நன்றாக சம்பாதிக்க கூடியவராக இருப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவும், தகுதிக்கு அதிகமாகவும் உங்களுக்கு எதுவானாலும் கிடைக்கும்.

காலை 10 முதல் 12 மணிக்குள் நீங்கள் பிறந்திருந்தால் சூரியன் 10 வது இடத்தில் இருக்கும். அவ்வாறு இருக்குபட்ச்சத்தில் நீங்கள் எந்த விஷயம் திட்டமிட்டு செயல்பட்டால் அது உங்களுக்கு வெற்றியை குவிக்கும். உங்களுடைய சிந்தனை கற்பனை திறன் அதிகமாகவும் இருக்கும். என்று சாஸ்திரம் சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்..!

மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் நீங்கள் பிறந்திருந்தால் சூரியன் 9 வது இடத்தில் இருக்கும். நீங்கள் அதிகமான பயணம் செல்ல விரும்புவீர்கள். இந்த இடத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் உங்களுக்கு பயம் அதிகமாகவும் இருக்கும் அதேபோல் புகழ் மிக்க இடமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  எதிர்கால வாழ்க்கை உங்களுக்கு சிறப்பு மிக்கதாக இருக்கும். நல்ல குணம் அதிகமாவே உங்களிடம் காணப்படும்.

நீங்கள் 2 மணி முதல் 4 மணிக்குள் பிறந்தால் உங்கள் கட்டத்தில் சூரியன் 8 வது இடத்தில் இருக்கும்.  உங்களுக்கு அறக்கட்டளை, வங்கி போன்ற இடங்களில் வேலை கிடைக்கும். நிதி தொடர்பான வேலையில் சிறந்து விளங்குவீர்கள். அதேபோல் உங்களுக்கென்று பிரச்சனை வரும் போது அதனை சரியான முறையில் சரி செய்யும் குணம் உங்களிடம் உள்ளது.

மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிறந்திருந்தால் சூரியன் 7 வது  இடத்தில் இருப்பார், இது ஜோதிடத்தில் கூட்டாளியின் வீபிஉ என்றும் சொல்லப்படுகிறது. உங்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்றும் சாஸ்திரம் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய துறையை தேர்ந்தெடுத்து விளங்கினால் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும்.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் நீங்கள் பிறந்திருந்தால் சூரியன் 6 இடத்தில் இருப்பார், நிறைய சாகசம் செய்வீர்கள், நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையாகவும் உங்களுக்கு இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் பெரிய அதிகாரியின் துறையில் தான் உங்கள் வாழ்க்கை அமையும். எந்த செயலிலும் எச்சரிக்கையுடன் எந்த விஷயத்தையும் செய்வீர்கள்.

இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் நீங்கள் பிறந்திருந்தால் சூரியன் 5 இடத்தில் இருப்பார், இந்த இடத்தில் சூரியன் இருந்தார் என்றால் தெரியாத விஷயத்தை தேடி தேடி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாவே இருக்கும். வியாபாரம், பிஸ்னஸ் செய்தீர்கள் என்றால் அதில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் அடைவீர்கள். காதல் கை கூடும்.

இரவு 10 மணி முதல் 12 மணிக்கு பிறந்தவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஜாதகத்தில் சூரியன் 4 ஆம் வீட்டில் இருப்பார். நீங்கள் பிஸ்னஸ் செய்தால் அதாவது ரியல் எஸ்ட்டெஸ்ட் செய்து வந்தால் அதில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.  பூர்வீக சொத்து உங்களுக்கு கிடைக்கவுக்கும் அதன் மூலம் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும். உங்களின் சொந்த  உழைப்பில் முன்னேறுவீர்கள். அதேபோல் உங்களின் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு அதிகமாவே கிடைக்கும்.

நள்ளிரவு 12 முதல் 2 மணிக்குள் பிறந்திருந்தால் சூரியன் 3 ஆம் வீட்டில் இருக்கும் என்று அர்த்தம். இந்த இடத்தில் இருந்தால் ஆசை, ஆர்வம், சாகசத்தில் மிகவும் ஈடுபாடுடன் இருப்பீர்கள். உங்களுக்கு பயணம் அதிகமாக இருக்கும் அது உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். சமூக வலைதளங்களில் நீங்கள் கொடிகட்டி பறப்பீர்கள்.  அதேபோல் சிறந்த சமூக சேவையை அதிகம் விருப்புவீர்கள்.

நீங்கள் பிறந்த நேரம் நள்ளிரவு 2 மணி முதல் 4 மணிக்குள் பிறந்தவரா அப்படி என்றால் சூரியன் இரண்டாம் வீட்டில் இருப்பார் அவ்வாறு இருப்பதால் குடும்பத்தில் நிதி மற்றும் வீடு பிரச்சனைகள் இருந்துகொண்டு இருக்கும். இருந்தாலும் பணம் சம்பந்தபட்ட விஷயத்தில் நன்றாகவே இருப்பீர்கள். நீங்கள் சிறந்த பேச்சாளாராக இருப்பீர்கள் அதேபோல் விருதுகளும் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்